ஆம்ஆத்மி எம்பிக்கு திடீர் பெயில்.. செந்தில் பாலாஜிக்கு இதே விதி பொருந்துமா? உத்தரவு சொல்வது என்ன?
சென்னை: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைதான ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உள்ளது. நீண்ட நாட்களாக சிறையில் இருப்பது, 6 மாதங்களாக வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, விசாரணையில் இதுவரை போதிய உறுதியான ஆதாரங்களை கொண்டு வராதது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். லைசன்ஸ் தரப்பட்டதில் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இதில்தான் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதே வழக்கில்தான் கைதானார். இந்த மதுபான ஊழல் வழக்கில்தான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரணங்கள் என்னென்ன?: நீண்ட நாட்களாக சிறையில் இருப்பது, 6 மாதங்களாக வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, விசாரணையில் இதுவரை போதிய உறுதியான ஆதாரங்களை கொண்டு வராதது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
அதே சமயம் ஆட்சேபனை காரணம் இல்லாததால், அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்காததால் சஞ்சய் சிங் எம்பிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அவர் தனது பணிகளை தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் அதே சமயம் இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் பிபி வரலே அமர்வு இதை கூறியுள்ளது.
அர்த்தம் என்ன; இதன் அர்த்தம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வழக்கில் இதே காரணத்தால் வெளியே வர முடியாது. அல்லது இதை காரணம் காட்டி வேறு வழக்கில் சிறையில் செந்தில் பாலாஜி போன்றவர்களும் பெயில் கேட்க முடியாது. இதை ஒரு உதாரணமாக பெயில் கேட்க எடுக்க முடியாது .
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு: முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பது தேவையற்றது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications