சல்லி சல்லியாகும் பாஜக பிளான்.. சண்முகம் பற்ற வைத்த தீ.. டெல்லி டூ தேனி.. பின்னணியில் யார்? "அவரா?"

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவி சண்முகம் கொளுத்திய தீ ஒன்று குபுகுபுவென பாஜக களத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.. ஆனால், அந்த புகைச்சலில் ஓபிஎஸ்ஸின் பெயரும் சேர்த்து அடிபடுகிறது..!

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலை குறிவைத்து திமுக தயாராகி கொண்டிருக்கிறது.. தினகரன் ஒதுங்கி உள்ளார்.. 9 மாட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் என சசிகலா பகீர் கிளப்பி கொண்டிருக்கிறார்..

எனவே தன்னை பலப்படுத்தும், தயார்படுத்தும் முயற்சியில் அதிமுக ரெடியாகிறது.. ஆனால், பாஜகவை நம்பி களம் இறங்க அதிமுக தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது.. கடந்த ஆட்சியில் நடந்த உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவை தள்ளி வைத்துதான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வேலை பார்த்தார்.. அதில் ஓரளவு அதிமுகவுக்கு பலனும் கிடைத்தது.

திமுக

திமுக

அதுபோலவே, இப்போதும் பாஜகவை கழட்டிவிடும் முயற்சியில் இறங்கி உள்ளாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.. காரணம், சிவி சண்முகம் அளித்த ஓபன் பேட்டிதான்.. சண்முகம் எப்போது பேட்டி தந்தாலும், அது டமார் என வெடிக்கும் அளவுக்கு சர்ச்சையை தந்துவிடும் என்றாலும், இந்த பேட்டியை அப்படி சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்துவிட முடியாது.. மிக முக்கியமான பேச்சை பேசியுள்ளார் சண்முகம்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

"அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தனர்... ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை... நாம பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்தோம். அவர்கள் கூட்டணியால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்து விட்டோம்... விழுப்புரம் தொகுதியில், சிறுபான்மையினர் ஓட்டுகள் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. ஆனால் நாம் 14 ஆயிரம் ஓட்டுகளில்" என்று சண்முகம் சொல்லி உள்ளார்.

பாமக

பாமக

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், அதிமுக சம்பாதித்த வெறுப்பை சிவி சண்முகம் அவ்வளவாக வெளிப்படுத்தவில்லை.. ஆனால், பாஜகவை மட்டும் குறிவைத்து பேசியுள்ளதால், இது கூட்டணி முறிவுக்கான ஆரம்பமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஆதரவாளர்

ஆதரவாளர்

அதுமட்டுமல்ல, இங்குதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் என்ட்ரி ஆகிறது.. சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான ஆதரவாளர்.. ஓபிஎஸ்ஸோ பாஜகவின் ஆதரவாளர்... ஓபிஎஸ் தன் மகனுக்கு சீட் வாங்குவதற்கு முடிந்த அளவுக்கு விசுவாசத்தை டெல்லியில் காட்டி வரும் நிலையில், சண்முகத்தின் பேச்சு நிச்சயம் பகீரை தந்திருக்கும்.

பாஜக

பாஜக

அந்த வகையில், இதனால் ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்னவென்று தெரிந்து கொள்ளவும், தேர்தலில் பாஜகவின் பிளான் என்னவென்று தெரிந்து கொள்ளவும், எடப்பாடி பழனிசாமியே, சிவி சண்முகத்தை இப்படி பேச வைத்து ஆழம் பார்க்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று இப்போதுவரை எல்.முருகன் சொல்லி கொண்டிருக்கறார்.. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இவர்தான் முதல் ஆளாக இப்படி சொன்னார்.. இப்போதும் கூட்டணி குறித்து இவர்தான் சொல்லி கொண்டும், நம்பிக் கொண்டுமிருக்கிறார்.. எனவே, பாஜகவுக்கு சண்முகம் தந்த ஷாக்தான் இது..!

 சிவி சண்முகம்

சிவி சண்முகம்

இங்கே இன்னொரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.. சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்ஸே இறங்கிப் போகத் தயாராகி விட்டார். அப்படி இருக்கும்போது சாதாரண சிவி சண்முகம் மட்டும் இப்போது வரை கெத்து காட்டி கொண்டும், இறங்கி போகாமல் மறுக்கவும் காரணம் தெரியவில்லை.. ஒருகட்டத்தில் அநாகரீகமாகவும், தன்னை மறந்து தடித்த வார்த்தைகளையும் பொதுவெளியில் சண்முகம் பேசிவிடுவது எக்காலத்திலும் ஏற்க முடியாதது..!

 என்ன காரணம்?

என்ன காரணம்?

சிவி சண்முகம் இவ்வளவு தீவிரமாக ஏன் சசிகலாவை எதிர்க்க வேண்டும்? ஜெயலலிதா இருந்தபோது சிவி சண்முகத்தையும் நல்ல மதிப்பில்தான் வைத்திருந்தார். நிச்சயம் சசிகலா அனுமதி இல்லாமல், ஆலோசனை இல்லாமல் இதை ஜெயலலிதா செய்திருக்க முடியாது... அப்படி இருக்கும்போது ஏன் சிவி சண்முகம், சசிகலாவை இப்படித் தீவிரமாக எதிர்க்கிறார்? என்ற உப கேள்வியும் நமக்கு எழுகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+