அமாவாசையில் பாஜக அதிரடி.. தனித்து போட்டியிட முடிவு.. சீனியர்களின் முடிவுப்படியே வந்தது அறிவிப்பு
அதிமுக - பாஜக பேச்சுவார்த்தையில் இன்று முடிவு எட்டப்படுமா என தெரியவில்லை
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை 2 நாட்களாகவே இழுபறியில் நீடித்து வரும் நிலையில், இன்று இறுதி முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. சுமூக முடிவு ஏற்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
Recommended Video

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க போகிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
அனைத்து கட்சிகளுமே தொகுதி பங்கீடு, சீட் குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்டன.. அந்த பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் உள்ளது..

பாஜக கூட்டணி
குறிப்பாக, அதிமுக - பாஜக கூட்டணி இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. வழக்கமாக தேர்தல் என்றாலே, முதலில் முடிவு செய்யப்படுவது பாஜகவுக்கான கூட்டணியும், தொகுதிகளும்தான்.. ஆனால், இந்த முறை இழுபறியிலேயே முடிவுக்கு வராமல் பேச்சுவாரத்தை உள்ளது. தங்களுக்கு என்னென்ன இடங்கள் தேவை என்பது குறித்து, சாதகமான லிஸ்ட்டை பாஜக தரப்பில் அதிமுகவிடம் தந்தனர்..

அதிமுக
ஆனால், அதை பார்த்துவிட்டு, குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவு செய்ததாக தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் செல்வாக்கு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கித்தருவதாக அதிமுக தரப்பில் சொல்லினர்.. அந்த வகையில், பாஜக எதிர்பார்ப்பதை விட மிக குறைந்த அளவிலேயே இடங்களை ஒதுக்க அதிமுக சம்மதித்தது.. வேண்டுமானால் மேயர் பதவிக்கு நாகர்கோவில் மாநகராட்சியை மட்டும் கொடுக்க சம்மதித்தது.. கோவையை விட்டுக்கொடுக்க அதிமுக மறுத்துவிட்டது.. இதனால், 2 தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்தது.

பாஜக
கோவை, திருப்பூர், மதுரை புறநகர் சுமார் 13 மாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான நிலை இருப்பதாக கூறி அந்த இடங்களில் அதிக இடங்களை கேட்பதாகவும், மற்ற இடங்களில் பாஜகவுக்கு சாதகமான வார்டுகளை மட்டும் ஒதுக்கினால் போதும் என்று பாஜக கேட்டிருந்ததாம்.. அதுமட்டுமல்ல, கோவை, நெல்லை உட்பட 3 மேயர் இடங்களையும் பாஜக கேட்டது..

மாநகராட்சிகள்
இதனிடையே, சென்னை மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டிலும் 2 கட்சிகளுக்கு இடையேயும் சுமூகமான உடன்பாடு எட்டவில்லை. சென்னையில் ஒரு சட்டமன்ற தொகுதியில் 2 வார்டுகள் என்ற வீதத்தில் மொத்தம் 42 வார்டுகளை பாஜக கேட்டது... ஆனால், சட்டமன்றத்துக்கு தலா ஒரு இடம் என்ற விகிதத்தில் 21 வார்டுகள் மட்டுமே வழங்க அதிமுக கூறியது.. 42 இடங்கள் தந்தாக வேண்டும் என்று அண்ணாமலையும் உறுதியுடன் இருப்பதாக கூறப்பட்டது. இப்படி எல்லா பக்கத்திலும் இழுபறி உள்ளதால், தொடர்ந்து பேசுவோம் என்று பாஜக தரப்பு சொல்லி இருந்த நிலையில் இன்று மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்தியது..

இழுபறி
இதன் முடிவு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இதனிடையே, ஒரு வேட்பாளர் லிஸ்ட்டை தயார் செய்யும்படி மாவட்ட தலைவர்களுக்கு பாஜக சீனியர்கள் மூலம் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. அந்த லிஸ்ட்டை சீனியர்கள் தயார் செய்தார்களாம்.. ஒருவேளை அதிமுகவிடம் இன்று எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் பாஜக முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டது.. இன்று அமாவாசை என்பதால், எல்லாவற்றிற்கும் சுமூகமுடிவு எட்டப்படும் என்று நம்பப்பட்ட நிலையில், பாஜக தனித்து போட்டி என்று முடிவு செய்துள்ளது.. அண்ணாமலை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications