Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் மீண்டும் சதுரங்க வேட்டை ஆடும் டெல்லி.. 10 மாதம் கூட இல்லை.. தாக்கு பிடிப்பாரா எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து பெரிய அளவில் பிரச்சனைகள், மோதல்கள் நடந்து வருகின்றன. அதிமுக உள்ளே மட்டுமின்றி அதிமுக கூட்டணிக்குள்ளும் கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன.

அதிமுகவிற்கு உள்ளேயும்.. அதிமுக கூட்டணிக்குள்ளும் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு சாதகமாக அதிமுகவில் பல மோதல்கள் நடக்க தொடங்கி உள்ளன. அதிலும் டெல்லி பாஜக தலைகள் இந்த விவகாரத்தில் தலையிட தொடங்கி உள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Edappadi Palanisamy

1. பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும். கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், 2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.

2. அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர் சென்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தார் ஈபிஎஸ். இந்நிலையில் செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

3. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லிக்கு புறப்படுவதாக தகவல்கள் வருகின்றன. நேற்று தமிழகத்தில் சந்திர கிரகணம் போல் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் என்றும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுகளுக்கு தனது பாணியில் பதிலளித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார்.

4. சமீபத்தில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதுகுறித்து டிடிவி தினகரன் மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்லும். கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவுகளின் காரணமாகவே வெளியேறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை. பாஜகவில் இருந்து விலகுவது என்பது நாங்கள் நிதானமாக எடுத்த முடிவுதான். தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

5. ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

6. இப்போது அதிமுக கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019, 2015 லோக்சபா தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாத காரணத்தால் கடுமையான சரிவை எடப்பாடி சந்தித்தார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மண்டல அரசியலில் தற்போது நடந்துள்ளது.

7. அதிலும் அமித் ஷா சந்திப்புகள் என்று டெல்லியும் இந்த விவகாரத்தில் நேரடியாக களமிறங்கி உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்.. மீண்டும் அதிமுக உள்ளே பாஜக சதுரங்க வேட்டை ஆட தொடங்கி உள்ளது. இதை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிப்பார்.. அடுத்த 10 மாதங்கள் தாக்கு பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+