"தனி ரூட்" செங்கோட்டையன் மீது கட்சி நடவடிக்கை பாயுமா? ட்விஸ்ட் வைத்து பேசிய அதிமுக மாஜி வைகை செல்வன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் சமீப காலமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் அக்கட்சி வட்ட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பாஜக தலைவர்களை செங்கோட்டையன் தனியாக சந்திப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் மீது அதிமுக மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்று வைகை செல்வனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதிலை பார்க்கலாம்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் இடையே சமீப காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி நடத்தும் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது, அவர் பங்கேற்ற கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என தொடர்ந்து செங்கோட்டையன் நடந்து கொள்ளும் விதம் அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் ஏற்படுமோ என தொண்டர்கள் நினைக்கும் அளவுக்கு பரபரப்பை எகிற வைத்து வருகிறது.

will-aiadmk-leadership-take-action-against-sengottaiyan-former-minister-vaigaichelvan-responds

செல்வாக்கு இல்லாதவர்கள் பற்றி

இத்தகைய சூழலில் தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் நேற்று சந்தித்ததாக தகவல் பரவியது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைசசர் வைகை செல்வனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகை செல்வன் கூறியதாவது:- "கட்சி என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிக சிறப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. அதை விடுத்து வேறு கருத்துக்கள் சொன்னால், எங்களால் பதில் சொல்ல முடியாது. இது குறித்து பொதுச்செயலாளர் விரைவில் உங்களிடம் பேசுவார்" என்றார்.

தொடர்ந்து செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வைகைச்ச்செல்வன், "இது குறித்து எடப்பாடி தான் முடிவு எடுப்பார். செல்வாக்கு இல்லாதவர்களை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" என்றார்.

எந்த உட்கட்சி பூசலும் இல்லை

சீமானும் இன்று மத்திய அமைச்சரை சந்தித்தார் என்றும், அதிமுக பாஜக கூட்டணி உருவாகுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வைகைச்செல்வன், "இப்போது தான் ஆரம்பக் கட்டம். இப்போது தான் விதை போட்டு இருக்கிறார்கள். இது முளைத்து, மரமாகி, பூவாகி காய்த்து கனியாகி பழம் ஆக வேண்டும். காலம் இருக்கிறது. காலம் வரும் போது இதற்கு எல்லாம் விடை தெரிந்துவிடும்" என்றார்.

அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் எதிராக பேசி வருவது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வைகைச்செல்வன், "எந்த உட்கட்சி பூசலும் இல்லை. ஒன்றிரண்டு சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சுகின்ற கட்சி அதிமுக கிடையாது. அடிக்க அடிக்க பந்து உந்தும். அறுக்க அறுக்க வைரம் மின்னும். அப்படித்தான் சோதனை என்று வந்தால் அதில் மேலே எழுந்து வரும் இயக்கம் தான் அதிமுக" என்று கூறினார்.

சீமான் மறுப்பு

முன்னதாக, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான கருத்தரங்கு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்னை வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது.

கிண்டியில் நிர்மலா சீதாராமன் தங்கியிருந்த ஐடிசி ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இத்தகைய சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை எனவும் சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்பட்ட தகவல் தவறானது எனவும் சொல்லப்படுகிறது.

இதே போல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை சீமான் திட்டவட்டமாக மறுத்தார். சீமான் இது தொடர்பாக கூறுகையில், சந்தித்தால் நான் சந்தித்தேன் எனச் சொல்லப் போகிறேன். எனக்கென்ன பயமா? தயக்கமா? ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் என்ன பாஜகவா?" என்றார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+