1 மாதத்தில்.. அண்ணாமலை பதவிக்கு சிக்கலா? என்ன இவர் இப்படி சொல்றாரே.. எடப்பாடியின் சக்ர வியூகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி சமீபத்தில்தான் அமித் ஷாவை சந்தித்தார், அவர்கள் ரகசியமாக பேசினார்கள். அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் அண்ணாமலையை தூக்குகிறார்களா? என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டாலும் அது பற்றி எடப்பாடி பழனிசாமி எதுவும் நேரடியாக இதுவரை பேசவில்லை. ஒருவார்த்தை கூட கூட்டணி முறிவை பற்றி பேசவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி ஏன் பாஜக பற்றி பேசவில்லை. இதற்கு பின் என்ன நடக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Will Annamalai be changed after a month due to his fight with Edappadi Palanisamy and AIADMK?

அதில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் முதலில் கூறினார். ஆனால் எடப்பாடி கூறினால்தான் நம்புவோம் என்று பாஜகவினர் கூறினார்கள். அதன்பின் இப்போதும் கூட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் கூட்டணி முறியும் என்றார்கள். இப்போதும் கூட எடப்பாடி அறிவிக்கவில்லை என்கிறார்கள். எடப்பாடி அறிவித்தால்தான் அதை நம்புவோம் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். இதுதான் சந்தேகத்தை தருகிறது.

எடப்பாடிதான் அமித் ஷாவை சந்தித்தார் . அவர்கள்தான் ரகசியமாக பேசினார்கள். அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதனால்தான் கூட்டணி முறித்ததை பற்றி எடப்பாடி பேச வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அமித் ஷாவை எடப்பாடி சந்தித்த போது எதோ நடந்துள்ளது. அமித் ஷா.. 20 தொகுதிகள் வேண்டும். ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறி உள்ளார். ஆனால் இதை எடப்பாடி கேட்கவில்லை. இதுவே மோதலாகி , கூட்டணி முறிய காரணம் ஆகி உள்ளது.

Will Annamalai be changed after a month due to his fight with Edappadi Palanisamy and AIADMK?

அதன்பின் கூட்டணியை முதல்முறை முறித்துவிட்டு அதன்பின் மீண்டும் டெல்லி தலைவர்களை சந்தித்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதற்கு டெல்லி தலைவர்கள் அவர் யாத்திரை எல்லாம் செல்கிறார். இப்போது கூட்டணியை முறிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.இதையடுத்து தான் சென்னை திரும்பிய தலைவர்கள் கூட்டணியை முறிக்கலாம் என்று கூறி உள்ளனர். கடைசியில் வேறு வழியில்லாமல் இவர்கள் கூட்டணியை குறித்துள்ளனர்.

டிடிவி, ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டும் என்றால் கூட்டணியை முறிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அண்ணாமலையை தடையாக அதிமுக நினைத்துள்ளது. அண்ணாமலையை மாற்றினால் கூட்டணி சரியாகிவிடும் என்று அதிமுக நினைக்கிறது. அப்படி என்றால் பாஜகவும் அண்ணாமலையை நீக்கும் நிலை வரலாம். பாஜகவின் வெற்றிக்கு குறுக்கே அண்ணாமலை இருந்தால் அவரை நீக்க அதிமுக தயாராக இருக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அண்ணாமலையை தூக்குகிறார்களா? அல்லது பாஜக போனால் என்று அதிமுகவை தூக்கி வீச முடிவு செய்கிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பின் பக்கம் ஆலோசனைகள் சென்று கொண்டு இருக்கின்றன. அதாவது கூட்டணி தொடர்பாக ஆலோசனைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தாலும் ஆச்சர்யப்பட முடியாது. தன் மீது விமர்சனம் வரும் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. அவர் தனக்கு எதுவும் பிரச்சனை வர கூடாது . தன்னுடன் இருப்பவர்களுக்கு எதுவும் பிரச்சனை வரக்கூடாது என்று நினைக்கிறார் அவ்வளவுதான்.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வரலாம் என்பதால்தான் பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது. பாஜக தலைவர்களை தாக்க கூடாது என்று எடப்பாடி கூறியுள்ளார். பின்பக்கம் எதோ ஆலோசனை சென்று கொண்டு இருக்கிறது. மீண்டும் கூட்டணி கதவை திறக்க எதோ ஆலோசனை நடந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+