சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவமானப்படுத்திட்டாரு! பாஜகவிடம் அண்ணாமலை "அந்த" உண்மையை சொல்லுவாரா.. "பூதத்தை" உசுப்பிய லட்சுமணன்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக - எடப்பாடி இடையே மோதல் இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் ஒன்இந்தியா தமிழ் அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தார். இவரை ஓ பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அமித் ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கவில்லை? எதுவும் மோதலா? கருத்து வேறுபாடா என்ற கேள்விகள் எழும்ப தொடங்கின. இது குறித்து கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மேலும் விவாதங்களை தீவிரமாக்கியது.

அமித் ஷா குறித்த கேள்விக்கு எடப்பாடி அளித்த பதிலில், அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி.

 அவசரம்.. அவசரம்.. உச்ச நீதிமன்றத்தில் முட்டி மோதிய எடப்பாடி! சிரித்த ஓபிஎஸ்.. இவ்வளவு பெரிய காரணமா? அவசரம்.. அவசரம்.. உச்ச நீதிமன்றத்தில் முட்டி மோதிய எடப்பாடி! சிரித்த ஓபிஎஸ்.. இவ்வளவு பெரிய காரணமா?

சர்ச்சை

சர்ச்சை


அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார். இவரின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார் எடப்பாடி. இவரின் பேச்சு காரணமாக எடப்பாடி - பாஜக இடையே மோதல் நிலவுகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது.

பாஜக எடப்பாடி

பாஜக எடப்பாடி

இந்த நிலையில் பாஜக - எடப்பாடி இடையே மோதல் இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் ஒன்இந்தியா தமிழ் அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் கட்சிகள் இரண்டு பெரும் திராவிட கட்சிகள். இரண்டு கட்சிகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதிமுக அழிய கூடாது என்பதால்தான் எடப்பாடிக்கு கூட "நாகரீகமான" தோல்வியை கொடுத்தனர். ஒரு தலைவரின் மறைவால் பிளவுபட்ட இயக்கங்கள் கண்டிப்பாக ஒரு நாள் சேரும். அதுதான் இயற்கை. யாராவது மனம் மாறுவார்கள், நிலைமை மாறும். என்றாவது அதிமுக ஒன்றாக சேரும். அதுதான் இயற்கையின் நியதி. டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் கூட மோதிக்கொண்டனர். இப்போது இவர்கள் இறங்கி வர தொடங்கி உள்ளனர்.

இறங்கி வரலாம்

இறங்கி வரலாம்

அதேபோல் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வமும் இருவரும் கூட இறங்கி வரலாம். ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி சொல்வது எத்தனை நாளைக்கு நிலைக்கும். எத்தனை நாளுக்கு அப்படியே உறுதியாக இருப்பார். இப்போது இவர்கள் பேசுவதை எல்லாம் நம்ப கூடாது. நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் சேரும் வாய்ப்புகள் உள்ளன. காலம் முடிவு செய்யும். அதிமுக இணைவது அவர்கள் கையில் மட்டும் இல்லை. பாஜக கையிலும் இருக்கிறது. பாஜக சுயநலத்திற்காக கூட 2024 தேர்தலுக்கு முன்பாக அதிமுக இணையலாம். இப்போது எடப்பாடி இருக்கும் உறுதிப்பாட்டுடன் இருக்க மாட்டார்.

அமித் ஷா

அமித் ஷா

எடப்பாடி பேச்சை சீரியசாக எடுக்க கூடாது. பாஜக கூட்டணியில் இணைய மாட்டேன் என்று எடப்பாடி சொன்னால் பார்க்கலாம். அவர் அப்படி சொல்லுவாரா? மாட்டார்? அப்படி இருக்கும் போது.. அதிமுக இணையவே அதிக வாய்ப்பு உள்ளது, என்று பத்திரிகையாளர் லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பாஜக - எடப்பாடி கருத்துவேறுபாடு குறித்து பேசிய லட்சுமணன், பாஜக - எடப்பாடி இடையே மோதல் துன்று சொல்லப்படும் வாதங்கள் எல்லாம் அர்த்தமற்றவை. பாஜகவிற்கு எடப்பாடி சவால் விடுவார் என்று பார்க்கவில்லை. நான் இப்பவும் சொல்கிறேன்.. பாஜகவை எடப்பாடி எதிர்க்க மாட்டார்.

நேரம் தரவில்லை

நேரம் தரவில்லை

அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை, ஓ பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக அழைத்தனர் என்பதால் எடப்பாடி கோபம் அடைந்தார் என்றே வைத்துக்கொள்வோம். பின்னர் ஏன் மோடியை பார்க்க போனார். ஓபிஎஸ் அருகே இருக்கும் போது எடப்பாடி அங்கிருந்து வெளியேறி இருக்கலாமே? ஏன் அங்கேயே நின்றார்? அவருக்கு அந்த தைரியம் வராது. பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் எடப்பாடிக்கு வராது. அமித் ஷாவை சந்திக்க கண்டிப்பாக எடப்பாடி நேரம் கேட்டார். 100 சதவிகிதம் நிஜம். அவர் வேண்டுமானால் வழக்கு போடப்பட்டு.

Recommended Video

    EPS இந்த ஜென்மத்துல BJP-யை எதிர்க்க மாட்டார் - S.P. Lakshmanan | Oneindia Arasiyal
    எடப்பாடி நேரம்

    எடப்பாடி நேரம்

    அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டார். இதை கொடுக்கவில்லை. இது அண்ணாமலைக்கும் தெரியும். மூத்த நிர்வாகிகள் எல்லோருக்கும் போன் செய்து எடப்பாடி சென்னையில் இருக்க சொன்னதும் நிஜம். ஆனால் அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை என்பதும் நிஜம். கேட்டது நடக்காத போது பிளேட்டை மாற்றி எடப்பாடி அமித் ஷாவை விமர்சனம் செய்கிறார். இது மாதிரி சமயத்தில் விஷயம் தெரிந்த அண்ணாமலைதான் ரோஷத்தோடு பதில் சொல்லி இருக்க வேண்டும். அண்ணாமலை மௌனமாக இருந்து பாஜக தொண்டர்களை அவமானப்படுத்திவிட்டார். இதை பாஜகவிற்கு சொல்ல வேண்டிய கடமை அண்ணாமலைக்கு இருக்கிறது. அவர் நேர்மையான தலைவராக இருந்தால், எடப்பாடி அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டதை பற்றியும், அதற்கு அமித் ஷாதான் நேரம் தரவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    அண்ணாமலை உண்மை

    அண்ணாமலை உண்மை

    பாஜகவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பாஜக அதிமுகவை பற்றி ஒரு வருடத்திற்கு கவலையே படாது. அதிமுக மோதிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் வளரலாம். அதிமுக பலவீனமாக இருக்கட்டும். நாம் கட்சியை வளர்ப்போம். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில்தான் அதிமுக மீது கவனம் செலுத்துவார்கள். அதுவரை அதிமுகவை பற்றி பாஜக கவலைப்படாது. அதிமுக பலவீனப்பட்டால் பாஜகவிற்கு நல்லதுதான். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் அதிமுக மீது பாஜக கவனம் செலுத்தும், என்று பத்திரிகையாளர் லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.

    English summary
    Will Annamalai tell the secret about Edappadi Palanisamy - Amit Shah alleged rift? S.P. Lakshmanan interview to Oneindia Arasiyal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X