போதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா
வைரஸில் இருந்து காக்க மீண்டும் ஒரு போதி தர்மன் வருவாரா?
Recommended Video
சென்னை: "7ம் அறிவு" படம் பார்த்த அனைவருக்குமே போதி தர்மர் கதை குறித்து ஓரளவுக்குத் தெரியும்.. அந்தக் கதையில் நிறைய முரண்பாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், தற்போது கரோனோ வைரஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் சீனர்களை மீட்க மீண்டும் ஒரு போதி தர்மர் வருவாரா என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
யார் இந்த போதி தர்மர்.. நிறையப் பேருக்கு 7ம் அறிவு படம் வரும் வரை பெரிதாக எதுவும் தெரியாது. குறிப்பாக இளைஞர்களுக்கு. ஆனால் இந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் போதி தர்மர் என்ற ஒருவரைப் பற்றி தெரிய வந்தது.
இவரைப் பற்றிய உறுதியான தகவல்கள் எங்குமே இல்லை. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், தமிழர் என்று ஒரு தகவல் உள்ளது. அதேசமயம், அவரைப் பற்றிய பல தகவல்கள் குழப்பமானவையாகவே உள்ளன என்பதில் ஐயமில்லை.

தற்காப்பு கலை
சரி.. இப்போது போதி தர்மர் குறித்த பேச்சு ஏன் எழுந்துள்ளது.. இருக்கிறது. போதி தர்மர் பல உலக நாடுகளுக்குப் பயணப்பட்டவர். தான் கற்ற தற்காப்புக் கலை வித்தையை (இதுதான் பின்னர் குங்ஃபூவாக மாறியது) தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்பியவர். மக்களுக்கு பல கலைகளை, மருத்துவத்தைப் போதித்தவர். அப்படித்தான் அவர் சீனாவுக்குள்ளும் வந்தார்.

வியாதிகள்
மலை காடுகள் வழியாக சீனாவுக்குள் அவர் வந்தபோது அங்கு மக்கள் பெரும் வியாதியில் சிக்கி பீடிக்கப்பட்டிருந்தனர் (இது உண்மை அல்ல என்று ஒரு தகவல் உள்ளது. போதி தர்மர் வியாதியை குணப்படுத்தினார் என்பதற்கும் போதிய ஆதாரம் இல்லை என்று ஒரு தரப்பு சொல்கிறது. அதேசமயம், உண்மைதான் என்று இன்னொரு தரப்பும் விளக்குகிறது). அந்த மக்களைப் பார்த்த போதி தர்மர் இவர்களை குணப்படுத்தி இங்கேயே தங்கி விட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

போதி தர்மர்
அந்த மக்கள் முதலில் போதி தர்மரை கண்டு பயந்தாலும் பின்னர் அவர் தங்களை குணப்படுத்தியதைப் பார்த்து அவர் மீது அன்பை பொழிந்தனர். அவரை தங்களது குருவாக ஏற்றுக் கொண்டனர். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி, மருத்துவம் பார்ப்பது எப்படி, தற்காப்பு கலையை எப்படி பயன்படுத்துவது என்பது உள்ளிட்டவற்றை அந்த மக்களுக்கு கற்றுகொடுத்தார் போதி தர்மர். இதுதான் ஷாவோலின் கலையாகும்.

கரோனா வைரஸ்
இப்போது போதி தர்மரின் முக்கியத்துவத்தை நாம் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. போதி தர்மர் வந்தபோது சீனாவை பீடித்திருந்ததாக கூறப்படும் கொடூர உயிர்க் கொல்லி வியாதி போல இப்போதும் கரோனோ என்ற கொடூரமான வைரஸ் பரவலில் சிக்கி சீன மக்கள் தவித்து வருகின்றனர். பல நூறு பேரை அது காவு வாங்கி விட்டது. இந்த நிலையில் மீண்டும் போதி தர்மர் வருவாரா என்ற எதிர்பார்ப்புகளை சிலர் எழுப்பி சமூக வலைதளங்களிலும் அதை பகிர்ந்து வருகின்றனர்.

அற்புதம்
நிஜம்தான்.. உயிர்கள் அழிவது எந்த வகையிலும் சோகமானது, தவிர்க்கப்பட வேண்டியதே. எனவே கரோனோ வைரஸிலிருந்து சீனா மீண்டு வர நிச்சயம் ஒரு அற்புதம் நடந்தால் அதை விட வேறு மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாதுதான்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications