ஈரோடு கிழக்கில் அதிக வாக்குகளுடன் உதித்த சூரியன்! ஈவிகேஎஸ் இளங்கோவனை முந்தி சந்திரகுமார் சாதனை!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் முறையாக திமுக வெற்றி பெறவுள்ள நிலையில் வேட்பாளர் சந்திரகுமார் மற்றொரு சாதனையை புரிந்துள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 20 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுகவின் சந்திரகுமார் 115709 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நாம் தமிழர் கட்சி 24151 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 1.15 லட்சம் வாக்குகளை திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெற்றதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம் நடத்தினர். திமுக முன்னிலை என சொல்லப்பட்ட போதே அறிவாலயத்திற்கு திமுகவினர் குவிந்தனர்.
சந்திரகுமாரின் வளர்ச்சி என்பது தேமுதிகவில் தொடங்கி தற்போது திமுகவில் தொடர்கிறது என சொல்லலாம். இவருடைய பழைய டேட்டாக்களை எடுத்து பார்த்தால், கடந்த 2011 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர் 69,166 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முத்துசாமி 58,522 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
அது போல் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் திமுக சார்பில் போட்டியிட்ட சந்திரக்குமார் தோல்வி அடைந்தார். அப்போதும் அவர் 57,085 வாக்குளை பெற்றிருந்தார். பின்னர் அவருக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் 2025 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
2011 ஆம் ஆண்டு சந்திரக்குமார் யாரை தோற்கடித்தாரோ அவரே இன்று அமைச்சராகி, அவருக்காக பிரச்சாரம் செய்து வந்தார். அவர் வேறு யாருமில்லை, முத்துசாமிதான்! மக்கள் தேமுதிக என்ற கட்சியை சந்திரகுமார் தொடங்கிய போது கூட அந்த தொகுதியில் அவருக்கான செல்வாக்கு இருந்தது தெரியவந்தது.
இந்த முறை திமுகவுக்கு ஒரு சாதனையையும் படைத்துக் கொடுத்துள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை திமுக வென்றதே இல்லை. அப்படிப்பட்ட நிலையில் முதல் முறையாக அதுவும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார்.
மேலும் கொங்கு மண்டலம் என்றாலே அது அதிமுகவின் கோட்டை என்பதை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சொல்லப்பட்டு வந்த நிலையில் அவை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
இந்த தொகுதியில் சந்திரகுமார் 2011 ல் எடுத்த வாக்குகளை அடுத்தடுத்து தேர்தலில் போட்டியிட்ட தென்னரசுவோ, திருமகன் ஈவெராவோ பெறவில்லை. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன், சந்திரக்குமாரை விட அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்தார். அவர் பெற்ற வாக்குகள் 1,10,156 ஆகும்.
இந்த முறை திமுகவுடன் நாம் தமிழர் மட்டுமே போட்டியிடுவதால் சந்திரக்குமார் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகளை விட அதிகம் பெறுகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ்அதை சந்திரக்குமார் பூர்த்தி செய்துவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை சந்திரக்குமார் பெற்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications