விஜய்க்கு ஆதரவா? கையை விரித்த தமிழக காங்கிரஸ்! எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்பது பற்றி வெளிப்படையாக கருத்து சொல்ல மறுத்த காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, இந்த விவகார்த்தில் டெல்லி தலைமையே முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, இந்த முடிவு ஏதுவும் எங்கள் கைகளில் இல்லை. டெல்லி தலைமையே இது பற்றி முடிவு செய்ய வேண்டும்" என்று பதிலளித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

Congress Back Vijay in Tamil Nadu Decision Left to High Command

விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறதா?

ஆட்சி அமைக்க விஜய் தயாராகி வரும் நிலையில், பெரும்பான்மையை காட்ட இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் விஜய்க்கு இந்த ஆதரவை வழங்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அரசியலில் எழுந்துள்ளது. இந்தபரப்புக்கு நடுவே சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்க்ளிடம் பேசிய நிவேதித் ஆல்வா கூறியதாவது:-

என்னென்ன தீர்மானங்கள்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது. கிரிஷ் சோடங்கர், செல்வ பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல் முடிவு என்னவென்றால், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் முடிவை கட்சியின் உயர்மட்ட குழு எடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் போடப்பட்டது.

இரண்டாவதாக தமிழ்நாட்டில் அரசு அமைக்கும் விவகாரம் தொடபாக ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று ஒருமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த மீட்டிங் முடிந்தவுடன் இன்று கிரிஷ் சோடங்கர் டெல்லி செல்கிறார். அவர் தேசிய தலைமையிடம் இந்த விவாகரம் குறித்து ஆலோசனை நடத்துவார்.

திமுகவுடனான உறவு சிறப்பாக உள்ளது

அங்கு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாங்கள் உங்களுக்கு பிறகு தெரிவிப்போம். காங்கிரஸ் என்பது தேசிய கட்சி. மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். தலைவணங்குகிறோம். டெல்லி தலைமை எடுக்கும் முடிவின் படி செயல்படுவோம். திமுகவுடனான எங்களின் உறவு சிறப்பாக உள்ளது.

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக இருந்தார். ஆனால் திடீரென டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததல் அங்கு செல்ல இருந்தார். அதனால் பங்கேற்க முடியவில்லை" என்றார்.

எங்கள் கைகளில் இல்லை

தவெக தலைவர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஆல்வா, கட்சியின் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை உங்களிடம் நாங்கள் தெரிவிப்போம். தேர்தல் தோல்வி குறித்து குழு அமைத்து ஒவ்வொரு தொகுதி குறித்து ஆய்வு செய்யப்படும். விஜய்யிடம் மட்டுமில்லை. பல்வேறு தலைவர்களுடன் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஸ்டாலின், மம்தா பானர்ஜியுடன் இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக பேசினார். இதில் தற்போதைக்கு வேறு எதுவும் இல்லை. தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த முடிவு ஏதுவும் எங்கள் கைகளில் இல்லை. டெல்லி தலைமையே இது பற்றி முடிவு செய்ய வேண்டும். நானொ வேறு யாரோ முடிவு செய்ய முடியாது. எப்போது முடிவு செய்யப்படும் என்று கேட்கிறீர்கள். முடிவு செய்த உடன் அறிவிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+