பத்திர பதிவு.. நில வழிகாட்டி மதிப்பு உயர்வு? ஓபிஎஸ் சொல்வதென்ன? பதிவுத்துறையின் உண்மை நிலவரம் இதுதான்
சென்னை: ஒரே ஆண்டில் பத்திரப்பதிவினை இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது கொடுமையிலும் கொடுமை என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்யை தினம், ஒரு நாளிதழில் பத்திரப்பதிவு குறித்த செய்தி வெளியாகியிருந்தது.. அதில், "பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்... துறையின் பணிகளை ஆய்வு செய்ததுடன், பத்திரப்பதிவு வருவாய், 10 வருடங்களில் டபுள் மடங்காக கூட உயராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாராம்.

அத்துடன், பதிவுத்துறையின் வருவாய் இலக்கு, 60,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் சார் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்ப, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
அறிக்கை: இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
இந்நிலையில் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள பத்திரப் பதிவு வருவாயான சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயினை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தத் தேவையான நில வழிகாட்டி மதிப்புகளை பரிந்துரைக்குமாறு சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கு நாம் ஒன்றை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.. நம்முடைய "ஒன் இந்தியா தமிழ்" தொடர்பாக நேற்றைய தினம், பதிவுத்துறை அதிகாரிகளிடம் நேரடியாகவே இதுகுறித்து விசாரித்தோம்..
தகவல்: அவர்கள் நம்மிடம் பேசும்போது,"பத்திரப்பதிவு வருவாயை உயர்த்தும் திட்டம் எதுவுமே தற்போது அரசுக்கு இல்லை, அதுவும் 60,000 கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதெல்லாம் தவறான தகவல் என்றும் நம்மிடம் தெளிவுபடுத்தினார்கள்.
அதுமட்டுமல்ல, பொதுமக்களின் நன்மைக்காகவே பதிவுத்துறை செயல்பட்டு வரும்நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் இதுகுறித்து தாங்கள் வெளியிடவில்லை என்பதையும், நம்மிடம் பதிவுத்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டதுடன், நிலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளியையும் வலுவாக வைத்துவிட்டார்கள்...!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications