"கிளீன் ஸ்வைப்".. மெகா புள்ளிக்கு பறந்த அசைன்மென்ட்.. திமுக அதிரடி.. விழிக்கும் பாஜக.. அப்ப அவங்க?
: தங்க தமிழ்செல்வனுக்கு திமுக மேலிடம் அசைன்மென்ட் தந்ததாக சொல்லப்படுகிறது
சென்னை: எடப்பாடி & ஓபிஎஸ் இடையே, உட்கட்சி பூசல் வெடித்து கிளம்ப, இதில் திமுக என்ட்ரி தந்து தன்னுடைய அரசியலை செய்ய துவங்கி விட்டதாம்.. இதற்கெல்லாம் என்ன காரணம்?
திமுகவுக்கு எப்போதும் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலங்களில் கணிசமான பகுதிகள் கைகொடுக்கும்... அதே நேரம் மேற்கு மண்டலம் எப்போதுமே திமுகவுக்கு கை கொடுக்காது..
அதாவது, அதிமுகவுக்கே பெரிதும் உதவும் என்பதே இதன் பொருள்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், இங்கு சாதி பெரும்பான்மையை முன்வைத்தே அரசியல் பிரதானமாக நடந்து கொண்டிருக்கிறது.

தெற்கு
ஜெயலலிதா இருந்தவரை தென்மண்டல ஓட்டு சதவீதம் கணிசமான அளவிலேயே வைத்திருந்தார்.. இதற்கு காரணம், ஜெயலலிதாவைவிட சசிகலாவின் ஆளுமைதான் முக்கிய பங்காக இடம்பெற்று வந்தது.. 30 வருடம் ஜெயலலிதாவுடன் சசிகலா லாபி செய்தது எல்லாமே இதே தென்மண்டலத்தில் தனக்குள்ள செல்வாக்கை, சாதி ஆதரவை முன்வைத்துதான் காரியங்களை சாதித்து வந்தார்.. கச்சிதமாக அரசியல் காய்களையும் நகர்த்தி வந்தார்.

புட்டு புட்டு வைத்து..
ஆனால், ஜெ,.மறைவுக்கு பிறகு எத்தனையோ பகீர் திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன.. இந்த திருப்பத்துக்கெல்லாம் காரணம் ஓபிஎஸ் என்பதை மறுக்க முடியாது.. சசிகலாவை நேரடியாக அன்று குற்றம் சொன்னவர்.. சமாதியில் அவருக்கு எதிரான புகார்களை புட்டு புட்டு வைத்தவர்.. சசிகலா அரசியலில் ஆக்டிவ்வாக இருந்தவரை ஓபிஎஸ் 2ம் பட்சமாகவே கருதப்பட்டார்.. ஆனால், சசிகலா சிறை சென்ற பிறகும் சரி, அவர் வெளிவந்த பிறகும் சரி, தெற்கை தன் கன்ட்ரோலில் வைத்து கொள்ள பல முயற்சிகளை மறைமுகமாகவே ஓபிஎஸ் மேற்கொண்டதாக செய்திகளும் கசிந்தன.

அப்செட்
கடந்த சட்டசபை தேர்தலின்போதே ஓபிஎஸ் மீது தென்மாவட்ட மக்கள் சற்று அதிருப்தியில் இருந்தனர்.. இதற்கு காரணம் வன்னியர் இடஒதுக்கீட்டு விஷயத்தில் ஏன் ஓபிஎஸ் ஏற்று கொண்டார்? வன்னியர்களுக்கு காட்டும் சலுகையை சொந்த சமுதாயத்தின் மீது காட்டக்கூடாதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.. இரண்டாவது காரணம், தென் மாவட்டத்தில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக உள்ளது..

சைலண்ட் ஓபிஎஸ்
தினகரனுக்கென்று தனியாக அங்கு செல்வாக்கு உள்ளது வேறு விஷயம்.. ஆனால், சசிகலா இல்லாத பட்சத்தில் தெற்கை கைக்குள் வளைத்து போட திமுகவும் ஒரு பக்கம் முயன்றது.. அதன்படி ஓரளவு வாக்கு சதவீதத்தையும் இங்கு கடந்த முறை தக்க வைத்தது.. ஓபிஎஸ்ஸே சைலண்ட்டாகிவிட்டதுதான் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் முணுமுணுப்புகள் வெடித்தன.. எடப்பாடி மட்டுமே திமுகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சென்றார், தேர்தல் களத்தில் முழுவீச்சில் இறங்கி ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கட்சிக்குள் வெடிக்க ஆரம்பித்தன.

ரவீந்திரநாத் எம்பி
திமுக ஆட்சி அமைந்ததுமே, ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தென்பட்டதையும், எடப்பாடி டீம் புட்டு புட்டு வைத்து வருகிறது.. இதில் உச்சக்கட்டமாக இப்போதுவரை பேசப்படுவது, முதல்வரை ரவீந்திரநாத் எம்பி தனியாக சந்தித்து பேசியதுதான்.. இதை பார்த்துதான், மொத்த அதிமுகவும் கொந்தளித்து விட்டதாகவும், ஓபிஎஸ் தங்களுக்கு தேவையேயில்லை என்பதை இந்த நிகழ்வு வைத்தே முடிவு செய்ததாகவும் பேட்டிகளை தர ஆரம்பித்தனர்.. ஆக, கடந்த சட்டசபை தேர்தலின்போது புகைந்து கொண்டிருந்த விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அறுவடை திமுக
அந்த வகையில், தென்மண்டலங்களில் அதிமுகவின் அதிருப்திகள் பெருகிவிட்டன.. யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தென்மண்டல அதிமுகவில் சிலர் குழம்பி போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஒருவேளை ஓபிஎஸ், சசிகலா, தினகரன் பக்கம் தாவினால், இவர்கள் அனைவரும் சேர்ந்து தென்மண்டலத்தை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.. அல்லது, மீண்டும் திமுகவே இங்கு அறுவடை செய்ய நிறைய சான்ஸ் உள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

தங்க தமிழ்ச்செல்வன்
தென்மண்டல அதிருப்தியாளர்களை திமுக பக்கம் அள்ளிகொண்டு வரும் அசைன்மென்ட், மூத்த தலைவர் தங்க தமிழ்செல்வனிடம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதிமுகவின் உட்கட்சி பூசலை, ஒருபக்கம் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருவதைபோல, திமுகவும் காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.. இந்த முறையும் திமுகவுக்கு மறைமுகமாக விட்டுக் கொடுத்துவிட்டு ஓபிஎஸ் அமைதி காப்பாரா? அல்லது பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, மவுனம் காப்பாரா? அல்லது சசிகலா, தினகரனுடன் உடனடியாக கரம்கோர்த்து, முக்குலத்தோர் அடங்கிய தெற்கை கட்டிக்காப்பாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
Recommended Video

ரவீந்திரநாத்
இத்தனை நாளும், புழுங்கி கொண்டிருந்த விஷயம், இன்று வெடித்து கிளம்பி விட்டது.. அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.... ஓபிஎஸ் திமுகவையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிச்சாமி கூட்டம், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளது.. இது சோஷியல் மீடியாவிலும், அதிமுகவிலும் விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications