சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் அந்த 214 பேர்.. "அவருக்கு" எதிராக லெட்டர் அறிவாலயத்துக்கு பறந்ததாமே..!?

துரைமுருகனுக்கு மீண்டும் சீட் வழங்கப்படுமா என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: மூத்த தலைவர் துரைமுருகனுக்கு எதிராக ஒரு விஷயம் திமுகவில் கிளம்பி இருக்கிறதாம்.. இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று அக்கட்சிக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில காலங்களாகவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு உடம்பு சரியில்லை.. ஏற்கனவே நிறைய ஆபரேஷன்களை செய்தவர்.. அளவுக்கு அதிகமாக எமோஷனல் ஆகக்கூடியவரும் ஆவார்.

Will Duraimurugan contest in TN Assembly Election 2021

கடந்த வாரம் ஒரு தகவல் கசிந்தது.. திமுக தலைவர் ஸ்டாலின் நெருக்கமானவர்களிடம் பேசும்போது, "அண்ணனுக்கு அடிக்கடி அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது. வயசும் 80க்கு மேல ஆயிடுச்சு... உடம்பை பாத்துக்கணும். அண்ணனுக்கு தேர்தல்ல சீட் தந்தால், பிரச்சாரத்துக்கெல்லாம் அலைய முடியுமான்னு தெரியல, இல்லாட்டி அறிவாலயத்துலயே உட்கார்ந்து தேர்தல் பணிகளை பார்க்க சொல்லாமா?ன்னு யோசிக்கிறேன்" என்று விவாதித்ததாக கூறப்பட்டது.

இதனால், துரைமுருகனுக்கு இந்த முறை சீட் தரப்படுமா என்ற சந்தேகம் பரவலாக இந்த ஒரு வார காலமாகவே எழுந்து வருகிறது.. ஆனால், துரைமுருனோ, இந்த முறை மறுபடியும் களமிறங்க போவதாக தொகுதிக்குள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், "82 வயசாகி விட்டது.. அடிக்கடி உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.. அவருக்கு ஓய்வு தந்துவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு தரணும் என்று அதே தொகுதியில இருந்து கட்சி தலைமைக்கு ஏராளமான லெட்டர்கள் சென்றதாம்.

இந்த விஷயம் துரைமுருகன் காதுக்கு சென்றுள்ளது.. யாரெல்லாம் தனக்கு எதிராக லெட்டர் போட்டது என்று உத்தரவு போட்டார்.. கடைசியில் 214 பேர் துரைமுருகனுக்கு எதிராக லெட்டர் போட்டது தெரியவந்ததாம். இதனால் அதிர்ந்து போனாராம் துரைமுருகன்.. இந்த முறை தேர்தலில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறாராம்.

திமுகவில் இளைஞர்களுக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் எப்போதுமே வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்பதும், பதவி வகித்தவர்களே மறுபடியும் மறுபடியும் பதவிகளை வகித்து கொண்டிருக்கிறார்கள், இளைஞர்களுக்கு வழிவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பலவருடமாக உள்ள ஒன்றுதான்..!

English summary
Will Duraimurugan contest in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X