"சில்லுவண்டு".. எடப்பாடி பழனிசாமி வசமாகும் திமுக ஓட்டு.. கடைசியில் சுதாரித்த அறிவாலயம்.. கவனித்த பாஜக
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி இடையே நடந்து கொண்டிருப்பது உண்மையா? அல்லது அரசியல் ஸ்டண்ட்டா? என்று குழம்பி போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.. மற்றொருபக்கம் 2 கட்சியிலுமே இந்த முடிவை வரவேற்று பட்டாசுவெடித்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை?
அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் ஆளுக்கொரு பக்கம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மை ஓட்டுக்கள்: எனினும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதிமுக அறிவித்துள்ள இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, அண்ணாமலை மீதான அதிருப்தி + மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுக்கள்.
- "அண்ணாமலையை பதவி நீக்கம் செய்து, தங்களுக்கு தங்களுக்கு இணக்கமான ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கான அதிமுகவின் தந்திரமாகவே, அதிமுகவின் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது, பாஜகவுடனான தொடர்பை நிரந்தரமாக தண்டிக்க அதிமுகவுக்கோ, அதன் தலைமைக்கோ தைரியம் கிடையாது" என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா சொல்கிறார்..
- "இன்றைக்கும் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பல்லாம் அழகிற்காக மட்டுமே" என்று காங்கிரஸின் கேஎஸ் அழகிரி சொல்கிறார்..
- "தற்போது பொய்யாக கூட்டணி இல்லை என்பார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்." என்று உதயநிதி சொல்கிறார்.
அதிருப்திகள்: ஆக, அதிமுகவின் கூட்டணி முறிவை, எதிர்க்கட்சிகள் யாருமே நம்பவில்லை.. நம்பவும் தயாரில்லை.. அண்ணாமலை மீதான அதிருப்தியால் எடுக்கப்பட்ட முடிவு என்றால், அது அதிமுகவின் கூட்டணி பிரச்சனையாக கருதப்படும். அதற்கு மாறாக சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவருவதற்கான அதிமுகவின் யுக்தி என்றால், திமுக இதை சும்மா விடாது.
ஆம்.. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு விவகாரத்தை வைத்தே, திமுக அரசியல் செய்ய போவதாக தெரிகிறது.. இதற்காக ஒரு தந்திரத்தையும் கையில் எடுத்துள்ளதாம்..
அதன்படி, பிரதமர் மோடிக்கு எதிராக, அதிமுகவினரை பேச தூண்டும் முயற்சியில் ஈடுபடுமாறு, திமுக பேச்சாளர்களுக்கு உத்தரவிடப் போகிறதாம்.. அதாவது, மோடியை விமர்சித்துப் பேசவில்லையென்றால், அதிமுக - பாஜக உறவு முறிவு மோசடியானது என்ற பாயிண்ட் கிடைத்துவிடும்.. இதைவைத்தே, பொது தளங்களில் கருத்துக்களை பரப்ப முடியும் என்று திமுக நினைக்கிறது.
பாஜக விமர்சனம்: ஒருவேளை, பிரதமரை, மேலிட பாஜகவை விமர்சிக்கவில்லையானால், அண்ணாமலை மட்டும்தான் அதிமுகவுக்கு பிரச்சனையே தவிர, பாஜக கிடையாது.. விமர்சிக்கப்பட வேண்டியது அண்ணாமலையே தவிர, பிரதமர் மோடியோ, மத்திய தலைவர்களோ கிடையாது..
எனவே, மோடியையும், அவருடைய ஆட்சியையும் விமர்சிக்கவில்லை என்றால், கூட்டணி முறிவு என்பதெல்லாம் நாடகம் என்று சொல்லி சிறுபான்மையின மக்களை எளிதாக நம்ப வைத்து விடலாம் என்று திமுக திட்டமிடுகிறதாம். இதனால், அதிமுக மீதான நம்பிக்கையும் பொதுதளத்தில் குறைந்துவிடும், சிறுபான்மையினர் வாக்குகளையும் சிதறவிடாமல் தக்க வைத்து கொள்ள முடியும் என்று திமுக திட்டமிடுகிறதாம்..
திமுக கணக்கு: அப்படியே அதிமுக தனித்து போட்டியிட்டாலும்கூட, தேர்தல் சமயத்திலோ அல்லது தேர்தல் முடிந்த உடனேயோ பாஜகவை மீண்டும் இணைத்து கொள்ளாது என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி இணக்கமாகிவிட்டால், இதை வைத்தும், அதிமுகவின் தந்திரத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தலாம் என்று திமுக கணக்கு போடுகிறதாம்.
ஆக, பாஜகவை விமர்சித்தாலும் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்படும்.. தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் இணைந்துவிட்டாலும் அதிமுகவுக்கு சிக்கல ஏற்படும்.. இதில் எது நடந்தாலும் திமுகவுக்குதான் பிளஸ் என்கிறார்கள்..
இதற்கு நடுவில், அதிமுகவுக்குள்ளேயே 2 பிரிவுகள் இருக்கின்றன.. ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் போன்றோர் எல்லாமே ஓரணியிலும், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் என பாஜகவுக்கு ஆதரவாளர்கள் மற்றொரு அணியிலும் உள்ளனர்.
பாஜக கூட்டணி: இதைத்தவிர, கிருஷ்ணசாமி, வாசன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் என கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளபோது, சொந்த கட்சியிலும், சொந்த கூட்டணியிலும் உள்ளவர்களை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார்?? என்பதையும் திமுக உற்றுகவனித்து வருவதாக தெரிகிறது.
கூட்டணி முறிவு இப்போதுதான் ஏற்பட்டுள்ளதால், இன்னும் கொஞ்ச நாள்கழித்துதான், அதிமுகவின் செயல்பாடுகளை வைத்து ஒரு முடிவெடுக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதற்கேற்றவாறு, மாநில தலைவர் அண்ணாமலையும் எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பதும், பலரையும் கவனிக்க வைத்து வருகிறது.
பிரதமரையும், மத்திய அரசையும், பாஜக அமைச்சர்களையும் அதிமுக தரப்பு விமர்சிக்குமா? அல்லது அடக்கிவாசிக்குமா?.. தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications