Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாய் திறக்காதீங்க..ண்ணே, ப்ளீஸ்"..எடப்பாடி சொன்னதுமே மிரண்ட பிரபலம்.. அப்ப எல்லாமே பொய்யா கோப்பால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா? அல்லது 3வது அணி உருவாகுமா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது.

அதிமுக - தமிழக பாஜக தலைவர்களிடையே, வார்த்தை போர்கள் வலுப்பெற்று வரும் நிலையில், இரு கட்சி தொண்டர்களுமே அதிருப்திக்கு ஆளாகி உள்ளதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

Will Edapadi Palaniswami form an alliance without BJP and What is Annamalai Going to do

நேற்றுமுன்தினம் எஸ்வி சேகர்கூட இதை சுட்டிக்காட்டியிருந்தார். "அண்ணாமலை இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட பெறாது. வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், அண்ணாமலையை பொருத்தவரைக்கும் அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசி வருகிறார். அதிமுக கூட்டணிதான் பாஜவிற்கு தமிழ்நாட்டில் பலம்.. அந்த பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுக தொண்டர்கள்: அண்ணாமலை இருக்கிற வரைக்கும் அதிமுகவினுடைய ஒரு ஓட்டு கூட பாஜக பக்கம் விழாது. பாஜவில் இருப்பவர்கள் மோடிக்காகவும், அமித்ஷாக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும், என்றைக்கு அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் அடிமட்ட தொண்டர்கள் கூட அண்ணாமலையை மன்னிக்க தயாராக இல்லை என்று எஸ்வி சேகர் கருத்து கூறியிருந்தார்.

அதற்கேற்றவாறு, அதிமுக - தமிழக பாஜக தலைவர்களிடையேயான விரிசல்கள் அதிகரித்து வருகிறது. பாதயாத்திரையின்போதும் இந்த விரிசல்கள் அதிகமாகவே ஏற்பட்டதை காண முடிந்தது.

அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஓபிஎஸ்ஸை நாங்கள் ஒதுக்கி வைக்கவில்லை, அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்" என்று ஒரு வார்த்தையை வீச, அது அதிமுக கூடாரத்தில் பற்றி எரிந்தது. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சீனில் வந்து, "அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்" என்று பஞ்ச் வைத்து தாக்கியிருந்தார். உடனே பாஜக நிர்வாகி கரு நாகராஜன் இதற்கு பதிலடி தந்தார்..

அண்ணாமலை: இதற்கு நடுவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு என்ட்ரி தந்தார்.. "எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அவ்வளவுதான். அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை என்றார்.

உடனே இதற்கு அண்ணாமலை சில பேர் அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக் கொள்கிறார்கள்... அவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லித் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.. செல்லூர் ராஜுவை பொறுத்தவரை எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அவர் பத்தாயிரம் தடவை பேசினாலும் என்னுடைய கருத்தை 'கட் காபி பேஸ்ட்' செய்து அவரிடம் சொல்லுங்கள் என்று சாடியிருந்தார்.

வார்த்தை மோதல்: உடனே செல்லூர் ராஜு, "அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி.. கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டிலேயே மாநிலத் தலைவர் பொறுப்பை பெற்றிருக்கிறார். அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. நீங்களும் பெரிதாக எடுத்துக்க வேணாம். எங்கள் மீது துரும்பு எரிந்தால் பதிலுக்கு நாங்கள் இரும்பை வீசுவோம். தமிழகத்தில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

இதையடுத்து மறுபடியும், ஜெயக்குமார், பொன்னையன் என ஒவ்வொருவராக வந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தனர்.. இந்த தலைவர்கள் பேசுற பேச்சுக்களையெல்லாம் பார்த்தால், அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லையோ என்ற சந்தேகங்கள் வலுவாக வெடிக்க துவங்கி விட்டன.

ஆன் தி ஸ்பாட்: இந்த நேரம்பார்த்து, ஒரு முக்கிய தகவல் கசிந்துவருகிறது.. அதாவது, இரு கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருப்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம்கூட விரும்பவில்லையாம்.. மதுரை மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு மதுரைக்கு சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி, ஆன் தி ஸ்பாட்டிலேயே செல்லூர் ராஜூவை கண்டித்தாராம்.

Will Edapadi Palaniswami form an alliance without BJP and What is Annamalai Going to do

"என்னண்ணே, இப்படி பண்றீங்க? பாஜககாரங்கதான் ஏதாவது விளம்பரத்துக்காக பேசிக்கிட்டே இருக்காங்கன்னா, நீங்களும் ஏன் அவங்க வாய்க்கு அவல் போட்ட மாதிரி பேசுறீங்க? தேவையில்லாமல் பேசுவதை குறையுங்க... முடியலைன்னா மீடியாவில் பேசாமல் இருங்கண்ணே" என்று சத்தம் போட்டாராம்..

செல்லூர் ராஜூ: இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத செல்லூர் ராஜூ, "சரி..ண்ணே.. இனி கவனமா இருக்கிறேண்ணே..." என்றாராம். இந்த சம்பவம் நடந்த மறுநாளே, செய்தியாளர்களை சந்தித்து வழக்கம்போல பேட்டி தந்துகொண்டிருந்தார் செல்லூர் ராஜூ.

அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை பேச்சை கேஷூவலாக எடுக்கவும், அதிர்ந்து போன செல்லூர் ராஜூ, "யாரு? அண்ணாமலையா? ஆளைவிடுங்க... மாநாட்டை பற்றி கேளுங்கள் சொல்கிறேன்" என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி, அடுத்த மேட்டருக்கு செல்லூர் ராஜூ ஜம்ப் ஆகிவிட்டாராம்... அப்படின்னா, கூட்டணி "கன்பார்ம்டு" போல..!!1

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+