எடப்பாடி பழனிசாமி இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்? அதிமுக - பாஜக கூட்டணி உறுதி? அஸ்திவாரம் ஸ்ட்ராங்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.. இந்த பயணத்தில் அவர் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவை இன்று சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. அநேகமாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்த தகவலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது எடப்பாடி, "'அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூட்டணி சாத்தியமாகாது.. அவர் தலைவராக இருந்தால், அதிமுகவின் தொண்டர்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை என்று சொன்னாராம். அதற்கு அமித்ஷா, "அண்ணாமலை விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று பதிலளித்தாராம்,
அதிமுக - பாஜக கூட்டணி முடிவு?
அதுமட்டுமல்ல, அதிமுகவுக்கு 70 சதவீதம், என்டிஏவுக்கு 30 சதவீதம் சீட் பிரித்து கொள்வதென எடப்பாடி தரப்பில் பேசப்பட்டுள்ளது.. அத்துடன் ஓபிஎஸ், தினகரன் என யாரை சேர்த்து கொண்டாலும், அவர்களுக்கு 30 சதவீத இடங்களிலிருந்து பாஜக தான் சீட் ஒதுக்கி தரவேண்டும் என்றும் தங்களது 70 சதவீத சீட்களில் மாற்று கட்சிகளுக்கு சீட் கேட்க கூடாது என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம்.
அதற்கு அமித்ஷா தரப்பில் 50-50% என்று சீட் பிரித்து கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை என்று டெல்லி சோர்ஸ் மூலம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னை வந்துள்ள அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.. இதனால் நேற்றே இது சம்பந்தமாக தன்னுடைய இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.. அந்தவகையில் அமித்ஷாவுடனான சந்திப்புக்குபிறகு, அதிமுக, பாஜக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, குருமூர்த்தியையும் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தலாம் என்கிறார்கள்.
செங்கோட்டையன் எங்கே?
அதேபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசுவாரா? என்று தெரியவில்லை. மொத்தத்தில், கூட்டணி கட்சிகளுக்கான முதற்கட்ட தொகுதி பங்கீடு, தேர்தலை எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை குறித்து இன்று அமித்ஷா பேசக்கூடும் என்பதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications