ராணுவம் வந்தாலும் எடப்பாடிக்கு பாதுகாப்பு இருக்காது! பரபரப்பை கிளப்பிய புள்ளி.. குலுங்கிய தெற்கு
சென்னை: குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம் என்று தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் 30ம் தேதி பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இவரை குருபூஜைக்கு வரவேற்று கடிதம் கூட ஆர் பி உதயகுமார் எழுதி உள்ளார். தனது ரத்தம் மூலம் அவர் கையெழுத்து போட்டுள்ளார்.

இதை ஏற்றுக்கொண்டு தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில்,
பேட்டி; அதில், முக்குலத்தோர் பிரிவினருக்கு தலைவர்கள் சசிகலா, ஓ பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர்தான். தேவையின்றி எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அசிங்கப்பட கூடாது. அங்கே சென்றால் அவருக்கு அசிங்கம் மட்டுமே ஏற்படும். இவரை ஒரு காலத்திலும் முக்குலத்தோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். தங்க கவசம் இருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கே வரவேற்பு கிடைக்காது.
குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம். தமிழ்நாட்டிற்கும் அசிங்கம். அதை ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயாராக இருக்க வேண்டும். அவரை முக்குலத்தோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி எனக்கு பலம் இருக்கிறது நான் போவேன் என்று இருக்க கூடாது.
உங்கள் சகாக்கள் வேண்டுமானாலும் போகலாம். மக்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால் நீ போக கூடாது. மீறி சென்றால் நிலைமை உனக்கு எதிராக செல்லும். உன்னுடன் இருக்கும் துரோகிகளை மக்கள் மன்னிப்பார்கள். அவர்கள் காசுக்கு விலை போனவர்கள். ஆனால் உன்னை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முக்குலத்தோர் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பல கட்சி தலைவர்கள்: இந்த நிகழ்ச்சிக்கு சர்வ கட்சி தலைவர்கள் வரலாம். யார் வேண்டுமானாலும் வரலாம் . நாங்கள் பிரச்சனை செய்ய மாட்டோம். எடப்பாடி பழனிச்சாமி வந்தாலும் நாங்கள் பிரச்சனை செய்ய மாட்டோம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எடப்பாடி ராணுவத்தோடு வந்தால் கூட அவருக்கு பாதுகாப்பு இருக்காது. அவருக்கு எதிராக தாக்குதல் நடக்கும்.
நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று கூறவில்லை. ஆனால் மக்கள் கோபத்தில் உள்ளனர். முக்குலத்தோர் மக்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அவருடன் இருக்கும் அரசியல் தலைவர்களையும் முக்குலத்தோர் நம்பவில்லை. அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி அங்கே போனால் அதனால் ஏற்படும் விளைவுகளை அவருடன் இருக்கும் நபர்கள் தடுக்க முடியாது.
எங்கோ தூரத்தில் இருந்து ஒருவர் செருப்பை தூக்கி வீசினால் என்ன செய்ய முடியும்? அதை எப்படி ராணுவம் தடுக்கும்? போலீஸ் தடுக்கும்.? முடிந்தால் அவர் வரட்டும் என்று தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications