எடப்பாடி முதல்வராவாரா? பாஜக ஆன்மிக பிரிவு தலைவரான ஜோதிடர் ஷெல்வியே இப்படி சொல்லலாமா!
சென்னை: சென்னை மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இந்நிலையில் தான் மாநாட்டுக்கு வந்திருந்த பாஜகவின் ஆன்மிக பிரிவு தலைவரும், பிரபல ஜோதிடருமான ஷெல்வியிடம், ‛‛ஜாதகப்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வாய்ப்புள்ளதா?'' என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் சொன்ன பதில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளன. மேலும் கூட்டணியில்புதிய கட்சிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கூட்டணி வலிமையை காட்டும் வகையில் சென்னை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.
மாநாட்டில் பாஜகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். பாஜகவின் ஆன்மிக பிரிவு மாநில தலைவரும், பிரபல ஜோதிடருமான ஷெல்வியும் பங்கேற்றார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர், ‛‛எடப்பாடி பழனிச்சாமியின் ஜாதக அமைப்பு எப்படி உள்ளது? அவர் முதல்வராக வாய்ப்புள்ளதா?'' என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஷெல்வி, ‛‛ஜாதகம் பற்றி உங்கள் நிகழ்ச்சியில் தனியாக பேசுவேன். அதுபற்றி கவலை வேண்டாம். இது அரசியல் மாநாடு.மோடி தலைமையில் முதல் மாநாடு. வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. நானும் பாஜகவில் ஒரு பிரிவில் தலைவராக இருந்தாலும், பாஜகவை பொறுத்தவரை அனைவரும் தொண்டர்கள் தான்.
இன்று மாநாடு நடக்கும் இடமான மதுராந்தகம் என்பது புனித கோவில் இருக்ககூடிய இடம். ஏரிக்காற்றழும் ராமர் முதல் ஆதிபராசக்தி பீடம் எல்லாம் இருக்கிறது. அதனால் சக்தி அருளும், ராமரின் அணுகிரகமும் பெரிய வெற்றியை எதிர்காலத்தில் தரும்'' என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications