"திமிங்கலம்" மகன் பனையூர் வீட்டு வாசலில் வெயிட்டிங்.. அதிமுக, பாஜக கூட்டணி முறியுதா? தவெக கண்டிஷன்?
சென்னை: பாஜகவுடன் கூட்டணி என்று சொன்னதிலிருந்தே, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து யாருமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை..பாஜக இருப்பதால், அந்த கூட்டணிக்கு யாருமே வராத பட்சத்தில் விஜய் வருவாரா தெரியவில்லை. ஆனால், விஜய்யிடம் கெஞ்சும் நிலைமைக்கு போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.. 53 வருட கட்சியை இன்று இந்த நிமையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
Politics 100% என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான பிரியன், "அதிமுகவின் வளர்ச்சி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கியதுதான்.. எடப்பாடி பழனிசாமி காலத்தில் வளர்ச்சிக்கு பதிலாக தேர்தல்களில் தோல்வியைதான் தழுவி வருகிறார்.. கட்சியை பலப்படுத்த வேண்டிய நிலைமை வந்துள்ளது..

தினகரன், ஓபிஎஸ், சசிகலா, எல்லாரையும் முதுகில் குத்தி வெளியேற்றி விட்டார்.. பாஜகவின் தூண்டுதலின்பேரில் அத்தனையையும் செய்தார்.. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாஜகவின் பெயரை கேட்டு நடந்து கொண்டார்..
முதுகுல குத்துவது, துரோகம் செய்வது போன்றவற்றை ஒற்றை தலைமையை நிரூபிப்பதற்கான முயற்சியாக கருதுகிறார். அதிமுகவில் களையெடுத்ததாக சொல்கிறார், ஆனால், பயிரையே பிடுங்கி போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் தொண்டர்கள்,
பிடுங்கப்பட்டது பயிரா? களையா?
53 வருட கட்சியை வைத்து கொண்டு, நேற்று கட்சி ஆரம்பித்த விஜய்யை நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.. இவ்வளவு பெரிய கட்சியின் தலைவர், கூட்டத்தில் தவெக கொடியை அசைப்பதை பார்த்து, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று சொல்லாமா?
கட்சியை வளர்க்க என்ன செய்திருக்கிறார் எடப்பாடி? எதுக்காக ஓபிஎஸ், தினகரன், சசிகலா, கேசி பழனிசாமி, புகழேந்தியை வெளியே அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி? பிடுங்கப்பட்டது களையா? பயிரா? என்பது கடந்த தேர்தலிலேயே நிரூபணமாகிவிட்டது,.
எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு கடந்த முறை வெற்றி பெற முடிந்ததா? 2021 தேர்தலில் ஓபிஎஸ் கூடவே இருந்தும்கூட அதிமுக வெற்றி பெற முடியவில்லையே? வெறும் 75 இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக.. ஆனால், எதிர்த்து போட்டியிட்ட திமுக 157 இடங்களில் டபுளாக வெற்றி பெற்றது.
அதிமுகவுக்கே கண்டிஷன்
கட்சியை வளர்க்காமல், அடுத்த கட்சியை நம்பினால் என்ன அர்த்தம்? சொந்த காலில் நிற்காமல், மாற்று காலை தேடி சென்றால், பலவிதமான அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.. நேற்று கட்சி ஆரம்பித்த விஜய், அதிமுகவுக்கே கண்டிஷனை போடுவார்.. அதையெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு, அதிமுக காலில் விஜய் விழுந்துவிடுவார் என்று நினைத்தால் அது பைத்தியக்காரத்தனம்.. இன்னும் சொல்லப்போனால் கரூர் சம்பவத்துக்கு பிறகும், விஜய்க்கு செல்வாக்கு துளியும் குறையவில்லை என்பதே இன்றுள்ள நிலைமை.. அவருக்கான ஆதரவு ரசிகர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை.
அதிமுக பலவீனம்
மாற்று கட்சிகள் தனக்கு தேவையில்லை, பத்திரிகையாளர்களையும் சந்திக்க மாட்டேன், போலீஸ் கட்டுப்பாளையும் மதிக்க மாட்டேன் என்று எதற்குமே கட்டுப்படாமல் உள்ளார் விஜய்.. அவருக்கு யார் ஆலோசனைகளை சொல்கிறார் என்றும் தெரியவில்லை.. விஜய்யின் முடிவு, செயல்பாடு இது எதுவுமே யாருக்குமே தெரியாதபோது, அவரை நம்பி அதிமுக இருப்பது சரியல்ல.
அதிமுகவை பலப்படுத்தியிருந்தால் தவெக பற்றி கவலைப்படவே தேவையில்லையே? தினகரன், சசிகலா, ஓபிஎஸ் கட்சிக்குள்ளே இருந்தால், தென் மாவட்டங்களை பற்றி கவலைப்படவே தேவையில்லையே? டெல்டாவிலிருந்தும் ஓட்டுக்கள் வந்துவிடுமே? அதைவிட்டுவிட்டு தவெக பின்னாடி ஏன் போகணும்? அங்கேயிருந்துதான் இதுவரை ஒரு ரியாக்ஷனும் இல்லையே?
பனையூர் வீட்டு வாசலில்
அதிமுகவின் முக்கிய தலைவரின் மகன், பனையூர் வீட்டு வாசலிலேயே விஜய்யின் முடிவுக்காகவே காத்து கொண்டிருக்கிறாராம்..
அதற்கு விஜய் தரப்பில், தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமானால், பாஜகவை விட்டு அதிமுக விலகி வர வேண்டும், காரணம், இதுவரை பாஜகவை விஜய் கடுமையாகவே எதிர்த்து வந்துள்ளார். அப்படியிருக்கும்போது, பாஜகவுடனேயே கூட்டணி வைத்தால் அது தவெகவுக்கு பின்னடைவாகிவிடும்.
சிபிஐ விசாரணையை காட்டி எங்களை பயமுறுத்த முடியாது.. மத்திய அரசு, மாநில அரசு எதுவானாலும், எங்கள் தலைவர் டீல் செய்வார்.. எதற்கும் கவலைப்பட மாட்டார், கரூர் விஷயத்தில் மனசாட்சிப்படியே நாங்கள் நடந்துள்ளோம்.. சிபிஐ-யை வைத்து எங்களை கைது செய்தாலும், நாங்கள் இன்னும் பெரிதாகவே வளர்வோம்.. எனவே, பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வரப்பாருங்க என்பது போல சொல்லியிருக்கிறார்களாம்.
விஜய்யிடம் கெஞ்சும் எடப்பாடி?
ஆனால், அதிமுகவுக்கு இது சாத்தியமா தெரியவில்லை.. மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய என்ன கண்டிஷன் போடப்பட்டது? எந்த நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்தார்? என்பதெல்லாம் தெரியவில்லை.. அப்படியிருக்கும்போது, கூட்டணியை உடைத்து கொண்டு வெளியே வருவாரா? என்பதும் தெரியாது.
பாஜகவுடன் கூட்டணி என்று சொன்னதிலிருந்தே, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து யாருமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை..பாஜக இருப்பதால், அந்த கூட்டணிக்கு யாருமே வராத பட்சத்தில் விஜய் வருவாரா தெரியவில்லை. ஆனால், விஜய்யிடம் கெஞ்சும் நிலைமைக்கு போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி..53 வருட கட்சியை இன்று இந்த நிமையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி என்று சொன்னதிலிருந்தே, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து யாருமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை..பாஜக இருப்பதால், அந்த கூட்டணிக்கு யாருமே வராத பட்சத்தில் விஜய் வருவாரா தெரியவில்லை. ஆனால், விஜய்யிடம் கெஞ்சும் நிலைமைக்கு போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.. 53 வருட கட்சியை இன்று இந்த நிலைமையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்கிறார் பிரியன்












Click it and Unblock the Notifications