“எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லைனா போ.. தெம்பு இருக்கிறவர நின்னு கத்தி செத்துக்கூட போவேன்” - சீமான்
சென்னை: "நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு.. இல்லைனா போ, உடம்புல தெம்பு இருக்கிற வர இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன்" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "எனக்கு முன்னாடி 2 இருந்துச்சி.. பதவியா? அல்லது மக்களுக்கான உதவியா? பணமா அல்லது இனமா? பதவியா? உதவியா? முச்சந்தியில் வந்து கத்துகிறேன். இந்தச் சத்தம் உன் காதில் விழுந்து மூளைக்குள் போய் உன்னை சிந்திக்க வைத்துவிட்டால் நான் பிறந்த பயனை அடைவேன்.
நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு இல்லைனா போ, உடம்புல தெம்பு இருக்கிற வர இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன். ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யார்கிட்டயும் கை கட்ட மாட்டேன்; சரணடைந்து வாழ்வதற்கு சண்டையிட்டு சாவதே மேல். உயிரை இழக்கலாம். உரிமையை இழக்க கூடாது.
உயிரினும் மேலானது நமது உரிமை. மண்டியிட்டு வாழ்வதற்கு மாண்டுவிட்டு போகலாம். இதுதான் உங்கள் பிள்ளைகளின் நிலைப்பாடு. நான்கு பக்கமும் எதிரிகள் இருக்கிறார்கள். நடுவில் நாம் தமிழர் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.
ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் பெயரையும் படித்துப் பாருங்கள். எழுத்து தமிழாக இருக்கும், ஆனால் உச்சரிப்பு ஆங்கிலமாக இருக்கும். எழுத்து ஆங்கிலமாக இருக்கும், ஆனால் உச்சரிப்பு தமிழாக இருக்கும். இதுதான் திராவிடர்கள் நீண்டகாலமாக பின்பற்றிவந்த இருமொழிக் கொள்கை.
இப்படியாக நம் முன்னோர்கள் அள்ளிப்பருகிய தமிழ் அழிந்துபோனது. எல்லா மொழியும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் மொழிதான் இறைவனால் பேசப்பட்டது. சில மொழிகள் பிறந்து சிறக்கும், ஆனால் தமிழ் மொழி சிறந்தே பிறந்தது; அது இயற்கையின் மொழி, இறைவனின் மொழி" எனப் பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications