பிரதமர் மோடி மேலயே கேஸ் போடுவோம்.. அய்யாவிடம் தான் கூட்டணி பேசனும்! அதிரடியாக பேசிய ராமதாஸ் தரப்பு
சென்னை: தற்போது வரை மருத்துவர் ராமதாஸ் தான் பாமக தலைவர், அன்புமணியிடம் பிரதமரே கூட்டணி குறித்து பேசினாலும் அது தவறு தவறு தவறு என பாமக சட்ட ஆலோசகர் அருள் கூறியுள்ளார். மேலும், 23ம் தேதி அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசினால், அன்புமணி மீதும் பிரதமர் மோடி மீதும் வழக்கு தொடர்வோம் என பாமக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகில் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் V.S.கோபு மற்றும் சட்ட ஆலோசகர் K.அருள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் கோபு," பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் அய்யா அவர்கள் உருவாக்கப்பட்டது, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர்தான். நிறுவனரும் அவர்தான் இதில் தேவையில்லாத சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

பாமக கூட்டணி சர்ச்சை
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அன்பு மணியிடம் கூட்டணி பற்றி பேசுவது எந்த வகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை. அன்புமணி நான் தான் தலைவர் நான்தான் தலைவர் என்பது, சின்னதம்பி படத்தில் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்று தாலியை எடுத்துக்கொண்டு ஒருவர் போவார் அதுபோல இருக்கிறது. நாங்கள் தற்போது மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளோம், உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கும் தொடர்ந்துள்ளோம். சிட்டி சிவில் உயர்நீதிமன்றத்திலும் நாங்கள் ஒரு வழக்கு பதிந்துள்ளோம். கட்சி எங்களுடையது, சின்னம் எங்களது என்று யாரும் உரிமை கூற கூடாது என்பதற்காக தடை கூறியுள்ளோம்.
ராமதாஸ் அன்புமணி மோதல்
வழக்கறிஞர் அருள் பேசுகையில்," 8.8.25 சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி சட்டவிரோதமாக மாமல்லபுரத்தில் ஒரு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட இருந்தார் அதனை கூட்டக்கூடாது இதனால் சட்ட வழங்கு சீர்கெடும், என்பதால்தான் உயர் நீதிமன்றம் வந்தோம். அன்புமணிக்கு தலைவர் என்கின்ற ஒரு அந்தஸ்தை உயர்நீதிமன்றம் வழங்கவில்லை. தலைவர் என்பதற்காக சிவில் கோர்ட்டுக்கு செல்லுங்கள் என்று அன்புமணியிடம் யாரும் கூறவில்லை. 28.5. 25 வரை தான் அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை
அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல. அவர் தலைவர் என்றால் தனியாக வழக்கு போட்டுக் கொள்ளட்டும் என தெளிவாக கூறி விட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க மருத்துவர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவராக இருக்கிறார். பொய்யை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் அன்புமணி தரப்பு உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்லாமல் இருக்கிறார்கள். ராமதாஸ் ஐயா அவர்களுக்கு மட்டும்தான் தேர்தல் சம்பந்தமாக கூட்டணி வைப்பதற்கும் விலகுவதற்கும் அதிகாரம் இருக்கிறது என்று சட்டம் இருக்கிறது.
மோடி பாமக கூட்டணி
அன்புமணி ஒரு தனி மனிதர் அவர் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது. கட்சி என்பது மருத்துவர் ராமதாஸ் இடம் தான் உள்ளது. அன்பு மணியிடம் கூட்டணி யார் வைத்தாலும் கூட்டணி வைப்பார் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என புகார் அனுப்பி உள்ளோம். அன்புமணி தரப்பிற்காக அனைத்துக்கும் நாங்கள் தடை கேட்டு உள்ளோம். தற்போது வரை மருத்துவர் ராமதாஸ் தான் தலைவர், அன்புமணியிடம் பிரதமரே கூட்டணி குறித்து பேசினாலும் அது தவறு தவறு தவறு.
அன்புமணி ராமதாஸ்
23ம் தேதி அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசினால், அன்புமணி மீது வழக்கு தொடர்வோம். பொதுக்குழுவை நடத்த அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பொதுச் செயலாளராக இல்லாத வடிவேல் ராவணன் கூட்டத்தை கூட்ட முடியாது. தமிழக டிஜிபி இடம் இது சம்பந்தமாக புகார் அளித்தோம். தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கவில்லை. 18.12.25 பொதுக்குழுவை கூட்டினோம், இதுவரை தேர்தல் ஆணையம் மருத்துவர் ராமதாஸ் தலைவர் அல்ல என்று கூறவில்லை. அன்புமணி கூட்டணி குறித்து பேசினால் கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications