முதல் "விக்கெட் காலி?.. மோடியை "ஆஹா"வென புகழ்ந்த திமுக எம்பி.. ரெடியாகிறதா புது கூட்டணி?
பாரிவேந்தர் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறார் என்கிறார்கள்
சென்னை: திமுக கூட்டணி எம்பி ஒருவர், பாஜகவையும், பிரதமர் மோடியையும் அளவில்லாமல் புகழ்ந்து தள்ளி உள்ளார்.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.
இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் தலைவர் பாரிவேந்தர். தான் சார்ந்த உடையார் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அந்த முயற்சி பெருமளவு அவருக்கு கொடுக்கவில்லை..
பிறகு, பாஜக, திமுக என்ற மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் களத்தில் போட்டியிட்டார்.. 2019-ல் பெரம்பலூர் எம்பி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இப்போது எம்பியாக இருக்கிறார்.

ஆக்டிவ்
எம்பியான பிறகு, ஆக்டிவ்வாக இவர் இல்லை என்று கூறப்படுகிறது.. உடல்நலம் சார்ந்த விஷயங்கள் காரணமாக தொகுதி பக்கம் அவ்வளவாக போக முடியவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டது.. இந்நிலையில் சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர் மனம் நொந்து பேசியிருந்தார்.. "அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்து வருத்தப்படுகிறேன்.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை..

விரோதம் - நட்பு
திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை.. இனி வரும் எந்த தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது.. இவர்களோடு கூட்டணி வைத்தால் அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்களோடு கூட்டணி வைத்தால் இவர்கள் கோபப்படுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.. பாரிவேந்தர் இப்படி ஒரு பேட்டியை பார்க்கும்போதே, அவர் யாரை சொல்கிறார் குழப்பம் ஏற்பட்டது.. காரணம், பாஜக, திமுக இரண்டு கட்சியுடன்தான் கூட்டணியில் இருந்திருக்கிறார்..

பார்க்கவ குலம்
அப்படி இருக்கும்போது, இந்த நேரத்தில் மனம் நொந்து புலம்புகிறார் என்றால், அது திமுகவாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. அதற்கேற்றார்போல், இன்றைய தினம் பிரதமர் மோடியை அபாரமாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பாரிவேந்தர். திருச்சியில் புத்தூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை, அச்சங்கத்தின் நிறுவனத் தலைவரும், திமுக நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.

ஐஜேகே
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது முழுக்க முழுக்க பாஜகவையும், மோடியையும் புகழ்ந்து தள்ளிவிட்டார். , "மகாத்மா காந்தியை போன்றவர் நம் இந்திய பிரதமர் மோடி... நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார்... அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.இந்தியாவின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்றுக் கொண்டு, நாட்டுக்காக உழைத்து வரும் பெருமகன் மோடி...

பாராட்டு
இதே தமிழகம், மோடியை புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும்... அது வெகு தொலைவில் இல்லை. சற்று கடினமாக இருந்தாலும் கூட, நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை சரியானது... மாநில கல்விக் கொள்கை தேவையற்றது" என்று தெரிவித்துள்ளார். ஆக, வரும் எம்பி தேர்தலுக்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க, ஐஜேகே இப்போதே தயாராகிவிட்டதோ என்ற டவுட் எழுந்துள்ளது.. அதேசமயம், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவிலை.. காரணம், திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு, பாஜகவை குறை சொல்லிவிட்டு கூட்டணியை முறித்த நிலையில், மீண்டும் பாஜகவுடனேயே கூட்டணிக்கு தயாராகிறதா ஐஜேகே என தெரியவில்லை.. அப்ப திமுக?? பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications