சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தர்மசங்கடம்".. குடியரசு தலைவர் வேட்பாளராகிறாரா இளையராஜா? பாஜக பிளான்.. விழித்து பார்க்கும் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றுதான் இளையராஜா எம்பி ஆக போகிறார் என்ற செய்தி ஊடகங்களில் எல்லாம் வைரலாக சுற்றிக்கொண்டு இருந்தது.. இப்போதோ இளையராஜாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வலம் வர தொடங்கிவிட்டன. சரி அந்த செய்தி உண்மையா.. பாஜகவின் பிளான்தான் என்ன என்று பார்க்கலாம்!

Recommended Video

    குடியரசு தலைவர் வேட்பாளராகிறாரா இளையராஜா? பாஜக பிளான் என்ன? | OneIndia Tamil

    பிரதமர் மோடி பற்றி இளையராஜா பாராட்டி பேசியதுதான் மிச்சம்.. பாஜக தரப்பில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசி, இளையராஜா பாராட்டி இருந்தார். இதையடுத்து பாஜகவின் தேசிய தலைவர் ஜெபி நட்டா தொடங்கி அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா வரை பலர் இளையராஜாவிற்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

    இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. நான் அண்டங்காக்கா கருப்புங்க.. அண்ணாமலை பதிலடி இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. நான் அண்டங்காக்கா கருப்புங்க.. அண்ணாமலை பதிலடி

     இளையராஜா மோடி

    இளையராஜா மோடி

    மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோரும் இளையராஜாவிற்கு ஆதரவாக பேசி உள்ளனர். திமுக தரப்பில் இளையராஜாவை பலரும் எதிர்த்து வந்தனர். அம்பேத்கார் - மோடி இருவரையும் எப்படி ஒப்பிடலாம் என்று திமுகவினர் பலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இளையராஜாவை மோசமாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    திமுக எதிர்ப்பு

    திமுக எதிர்ப்பு

    இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவர் 12 பேரை ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களாக நியமிக்க முடியும். பல்வேறு துறையில் சிறப்பாக செயல்படும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எம்பி பதவி வழங்க முடியும். இதில் இந்த முறை இளையராஜா இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்தது.

    எம்பி இளையராஜா

    எம்பி இளையராஜா

    சச்சினுக்கு கிடைத்தது போல இவருக்கு பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் புதிய தகவலாக இளையராஜாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி தனித்து வேட்பாளரை நிற்க வைத்தால் அந்த வேட்பாளர் வெற்றிபெறுவது கஷ்டம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தற்போது 48.8 விழுக்காடு வாக்குகளே உள்ளன.

     குடியரசுத் தலைவர் இளையராஜா

    குடியரசுத் தலைவர் இளையராஜா

    இதனால் பாஜக கூட்டணி தனித்து ஒரு வேட்பாளரை நிற்க வைத்து வெற்றிபெற வைப்பது கடினம். இதனால் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை பாஜக நிற்க வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதில் என்ன வியூகம் என்றால்.. தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை நிற்க வைத்தால், அந்த நபரை திமுக எதிர்ப்பது கடினம் ஆகும். தமிழர் ஒருவரை திமுக குடியரசுத் தலைவராக விடாமல் தடுக்கிறது என்று பாஜக பிரச்சாரம் செய்யும். இது ஒரு விதமான தர்ம சங்கடமான சூழலை திமுகவிற்கு ஏற்படுத்தும்.

    கட்டாயம்

    கட்டாயம்

    திமுக பெரிய கட்சியாக இருப்பதால் அவர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக வகுக்கும் வியூகமே இந்த "தமிழர் வேட்பாளர்" அஸ்திரம் என்று கூறப்படுகிறது. இதனால் திமுக அந்த வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும் கட்டாயம் ஏற்படலாம். இதனால் பாஜகவின் பிளானை திமுக கவனமாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. முன்னதாக தமிழிசை சௌந்தராஜனை பாஜக முன்னிறுத்த போவதாக கூறப்பட்டது. ஆனால் பாஜக பின்னணி இல்லாத ஒரு பொதுவேட்பாளரை பாஜக முன்னிறுத்தலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இளையராஜாவை பாஜக அப்படி முன்னிறுத்த வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

     அரசியல் வல்லுனர்கள்

    அரசியல் வல்லுனர்கள்

    ஆனால் இளையராஜாவை பாஜக தேசிய அளவில் இவ்வளவு பெரிய பதவிக்கு முன்னிறுத்துவது சந்தேகம்தான். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் நிஜமாக வாய்ப்பு குறைவு. அதிகபட்சம் அவருக்கு எம்பி பதவி கொடுக்கப்படலாம் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத் தேர்தல், லோக்சபா தேர்தலை மையமாக வைத்து பட்டேல் சமூகம் உள்ளிட்ட சில சமூகத்தினருக்கு வேண்டுமானால் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக வாய்ப்பு கொடுக்கலாம்.. இளையராஜாவை பாஜக முன்னிறுத்துவது சந்தேகம்தான் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

    English summary
    Will Ilaiyaraja gets Presidential candidature chance? What is BJP plan? இளையராஜாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வலம் வர தொடங்கிவிட்டன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X