உயிலை விடுங்க.. திருமணம் ஆகாத கிறிஸ்துவ மகள் தந்தையிடம் பராமரிப்பு தொகை கேட்க முடியாது: கேரளா கோர்ட்
சென்னை: அப்பா சொத்து மகன்களுக்கே என்றிருந்த நிலைமை மறைந்து, தற்போது சட்ட விதிமுறைகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்டும் உள்ளன. எந்தெந்த சூழலில் அவர்கள் தங்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியாது என்பதுடன், அப்பாவின் சொத்தில் மகள்களுக்கும் உரிமை உள்ளது என்பதை சட்ட விதிகள் தெளிவாக கூறுகின்றன. இந்நிலையில், கேரளா ஹைகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தந்துள்ள தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தற்போதுள்ள நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, 2005ம் ஆண்டில், இந்து வாரிசுச் சட்டத்தில் (1956), மகள்களுக்கும் அவர்களின் தந்தையின் சொத்தில் சமமான பங்கு இருப்பதாக சட்டப்பூர்வ உரிமை உறுதி செய்து திருத்தம் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, அப்பாவின் சொத்தில் மகன்களை போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு.. கடந்த 2005ல் செய்யப்பட்ட இந்த திருத்தமானது, தந்தையின் சொத்தின் மீது மகள்களுக்குள்ள உரிமைகளை மேலும் வலுப்படுத்தியது.. அத்துடன், உரிமைகள் பற்றி நிலவிய குழப்பத்தையும் ஒரேடியாக நீக்கியது.

அப்பாவின் சொத்து யாருக்கு
ஆனால், அப்பாவின் சொத்து, அவர் சுயமாக சம்பாதித்த சொத்தாக இருக்கும் பட்சத்தில், மகள் அதனை உரிமை கோர முடியாது.. அப்பாவ தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டியிருந்தால் அல்லது சொத்துக்களைப் வாங்கி இருந்தால், மகனுக்கோ, அல்லது மகனுக்கோ என அவர் விரும்பியவருக்கு மட்டுமே அதை எழுதி வைக்க முடியும்.. அல்லது பரிசளிக்க வழங்க முடியும்..
மற்றபடி, தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியை மகளுக்கு வழங்க தந்தை மறுத்துவிட்டால், அவரின் முடிவை எதிர்த்து மகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதுதான் தற்போதுள்ள சட்டநடைமுறையாகும்.
பராமரிப்பு தொகை கேட்ட மகள்
இந்நிலையில், 65 வயது அப்பாவிடமிருந்து தனக்கு பராமரிப்பு தொகை (maintenance) வேண்டும் என்று கேட்டு, இளம்பெண் கேரள குடும்ப நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்தார்.உடனே குடும்ப நீதிமன்றமும், இந்த மனுவை விசாரித்து, தனியாக வாழும் அவரது மனைவிக்கு மாதம் ரூ.20,000 பராமரிப்பு தொகையும், மற்றும் 27 வயது திருமணம் ஆகாத மகளுக்கு ரூ.10,000 பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உடனே 65 வயது தந்தை, அந்த உத்தரவுக்கு எதிராக,கேரளா ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்னுடைய மகள் மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் மேஜராக இருந்ததால், பராமரிப்பு தொகைக்கு தகுதியில்லை.. என்னை விட்டு பிரிந்து சென்றது என்னுடைய மனைவிதான்.. எனக்கு போதுமான வருமானம் இருப்பற்காகவே பராமரிப்பு கேட்க முடியாது. எனவே, குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தந்தை சொத்து மகளுக்கு
நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இது தொடர்பான வழக்கை விசாரித்தது.. இறுதியில், இந்த வழக்கில், திருமணம் ஆகாத கிறிஸ்தவ மகளுக்கான பராமரிப்பு தொகை வழங்கப்பட முடியாது என்று தீர்ப்பை தந்துள்ளது..
அப்போது நீதிமன்ற அமர்வு மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களை (Personal Laws) மேற்கோள் காட்டி விளக்கும்போது சொன்னதாவது“ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் (HAMA) பிரிவு 20(3) படி, தந்தைக்கு தனது திருமணம் ஆகாத மகளுக்கு பராமரிப்பு வழங்கும் சிவில் கடமை (civil liability) உள்ளது.
அதேபோல், இஸ்லாமிய தனிச்சட்டங்களிலும், தந்தை தனது திருமணம் ஆகாத மகளுக்குப் பராமரிப்பு வழங்கும் கடமை உண்டு.ஆனால், கிறிஸ்தவர்கள் தொடர்பான எந்த தனிச்சட்டத்திலும், மகள் தந்தையிடம் பராமரிப்பு கோர அனுமதிக்கும் விதி இல்லை. எனவே, குடும்ப நீதிமன்றம் வழங்கிய மகளுக்கான பராமரிப்பு உத்தரவு நிலைத்திருக்க முடியாது.
மனைவிக்கு கணவன் கடமை
அதே நேரத்தில், மனைவிக்கான பராமரிப்பு தொகையை மறுக்கும் மனுதாரரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்காது.. ஒரு தாயின் பெற்றோர் கடமை (parental obligation) என்பது, திருமணப் பொறுப்பை விட விரிவானது..எனவே மனைவிக்கு மாதம் ரூ.20,000 பராமரிப்பு தொகையும், கல்விச்செலவுக்கான ஒருமுறை ரூ.30,000 தொகையும் வழங்கிடுமாறு குடும்ப நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்கிறது என்று கூறியிருக்கிறது.
திருமணமாகாத கிறிஸ்தவ மகள், தந்தையிடம் இருந்து பராமரிப்பு கோர முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications