அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது.. விண்ணில் பாயும் ஆதித்யா எல்1.. சூரியனை தொடுமா? என்ன நடக்கும்?
சென்னை: சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. அதேபோல் சூரியனுக்கு மிக மிக அருகில் கூட செல்லாது. அப்போது ஆதித்யா எல்1 எங்கேதான் செல்லும் என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்!
சமீபத்தில்தான் இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி ஆய்வு செய்து வருகிறது,
சூரிய ஆய்வு: இப்படிப்பட்ட நிலையில்தான் சூரியனை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா மிஷனை கையில் எடுத்துள்ளது. இதை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. 100-127 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது. சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.
ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது.
எங்கே செல்லும்: சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது. மாறாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வரும். அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்ற திருக்குறள் போல.. சூரியனை அகலாமல்.. அணுகாமல் தூரத்தில் இருந்து தீ காய்வது போல ஆதித்யா எல் 1 சுற்றி வரும்.
ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும். எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்.
நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதேபோல் ஐரோப்பாவும் எல்1 பாயிண்டிற்கு இதேபோல் விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தில் இருக்கும் liquid apogee motor (LAM) என்பதுதான் இதை விண்ணுக்கு சுமந்து செல்லும். அதாவது புவி வட்டப்பாதையில் பிஎஸ்எல்வி ஆதித்யாவை நிறுத்திய பின் அது பூமியை சுற்றி சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக வட்டப்பாதையை அதிகரிக்கும். இதில் வட்டப்பாதையை அதிகரிக்க liquid apogee motor (LAM) பயன்படுத்தப்படும்.
அப்படியே வட்டப்பாதையை அதிகரித்து எல் 1 பாயிண்ட் அருகே ஆதித்யா எல் 1 செல்லும். அங்கிருந்து மேலும் சில வட்டங்களை அடித்து liquid apogee motor (LAM) எல் 1 பாயிண்டில் சுற்ற தொடங்கும். இதற்கு பெரும்பாலும் 127 நாட்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications