பொங்கலன்று பொங்குமா? நாளை கோர்ட்டுக்கு வரும் ஜனநாயகன் கேஸ்! உட்சபட்ச எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' படம் தொடர்பான சட்டப்போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் நாளை இந்த படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து (CBFC) சான்றிதழ் கிடைக்காத நிலையில், படத்தை தயாரித்த கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு, திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பெரும்பான்மை கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, 'ஜனநாயகன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 9ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம் படம் திரையிடுவதற்கான சட்ட தடைகள் நீங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் கடைசி திரைப்படம்
ஆனால் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், அதே நாளில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவிற்கு நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் காரணமாக 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியது.
ஜனநாயகன் பட வழக்கு
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து திடீர் உத்தரவு பெறும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என்பதே தணிக்கை வாரியத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம்
இதற்கிடையில், 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால் அந்த மனுவில் சில தொழில்நுட்ப பிழைகள் இருந்ததால், வழக்கிற்கு உடனடியாக எண் வழங்கப்படவில்லை. தற்போது அந்த அனைத்து பிழைகளும் திருத்தப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்கியுள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஜனவரி 15 விசாரணை
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'ஜனநாயகன்' திரைப்பட தணிக்கை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை, அதாவது ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் நாளன்று விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த மேல்முறையீட்டு மனு ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வரும் என உத்தேச பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தேச விசாரணை பட்டியலில் இந்த வழக்கு முன்னகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதனால், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் எதிர்காலம் குறித்த தீர்ப்பு மிக விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. ஒருபுறம் சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மறுபுறம் அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. பொங்கல் நாளன்று நடைபெறவுள்ள உச்ச நீதிமன்ற விசாரணை, விஜய்யின் கடைசி திரைப்படம் குறித்த குழப்பங்களுக்கு முடிவுகட்டுமா என்ற கேள்வி தற்போது அனைவரிடமும் எழுந்துள்ளது.
-
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications