எடப்பாடி பழனிசாமி வைக்கும் "புள்ளி".. கோலம் போட தயாராகும் "ஜெ".. ஒரே பரபரப்பில் தென்மண்டலம்
எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமாருக்கு முக்கிய பொறுப்பு தர போகிறாராம்
சென்னை: அதிமுகவில் தினம் தினம் ஒரு திருப்பம் ஏற்பட்டு வரும் நிலையில், இப்போது முக்கிய பரபரப்பு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைது என்பது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றாலும், எதிர்பாராத பல சிக்கல்கள் அதிமுகவுக்குள் எழவே செய்தது.
ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்ற பின்னணியில் ஜெயக்குமார் கைதானது அதிமுகவுக்கு அதிர்ச்சிதான்.. அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே நுழைந்து கைது செய்ததை எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்து போய் பார்த்தார்.

ஜெயக்குமார்
காரணம், அதிமுகவின் குரலாய், இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமியின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பவர் ஜெயக்குமார்தான்.. இவர் மீதே கையை வைத்துவிட்டதே திமுக? என்ற ஷாக்கில் இருந்து அதிமுக மேலிடத்தால் வெளிவர முடியாமல் போனது.. எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் இரவே கண்டன அறிக்கை வெளியிட்டார்.. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை நேரிலும் சந்தித்து நம்பிக்கை தந்தார். அதிமுகவை திரட்டி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்..

ஓபிஎஸ்
ஆனால், இவ்வளவும் ஓபிஎஸ் இல்லாமலேயே தனித்து செய்தார்.. இதற்கு பிறகுதான், தேனியில் அதிமுக கூட்டம், சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம், ஓ.ராஜா சந்திப்பு அதிரடியும் ஓபிஎஸ் தரப்பில் நடந்தது.. என்றாலும், ஜெயக்குமார் விடுதலைக்கு பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஓரளவு சமாதானம் ஆனார்கள் என்றாலும், ஒற்றை தலைமை சலசலப்பு இன்னும் நீங்கவில்லை என்றே கருதப்படுகிறது.. சசிகலாவின் அதிரடிகள் பெருகி வரும்நிலையில், இரட்டை தலைவர்களிடமும் அதிருப்தி நீங்கவே இல்லை.

சசிகலா
தேனி கூட்டத்தை போலவே, சசிகலாவுக்கு ஆதரவான தீர்மானங்களை பல மாவட்டங்களில் ஓபிஎஸ் நிறைவேற்ற சொன்னதாக செய்திகளும் கசிந்தன. இதற்கு காரணம், தன்னை வழக்கம்போல், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்று ஓபிஎஸ் தரப்புக்கு சந்தேகம் உள்ளது.. ஆனால், சசிகலா பக்கம் சாய்வது போலவே ஏதாவது ஒரு திகிலை கிளப்பி, தன் காரியங்களை ஓபிஎஸ் சாதித்து கொள்வதாக எடப்பாடி தரப்புக்கு சந்தேகம் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
அதனால்தான், ஓபிஎஸ்ஸுக்கு செக் வைப்பது போல ஒரு அதிரடி முடிவை யோசித்து வருகிறாராம்.. அதன்படி, அவருக்காக கட்சியின் முக்கிய பொறுப்பை தரலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.. குறிப்பாக, அக்கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கலாம் என்ற முடிவில் உள்ளாராம்.. இப்போதைக்கு தமிழ்மகன் உசேன் தற்காலிக தலைவராக உள்ளதால், அந்த பொறுப்பைதான் ஜெயக்குமாருக்கு வழங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்..

சசிகலா
ஜெயக்குமார் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் என்றாலும், கட்சியின் மிக உயர்ந்த பதவியை தருவதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கடந்த காலங்களில் சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்தது ஜெயக்குமார்தான்.. சசிகலா என்ற பெயரை சொன்னால், எடப்பாடியே அமைதியாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக கொந்தளித்தவர் ஜெயக்குமார்தான்..

ஜெயக்குமார்
இதுபோக, தொண்டர்களிடம் ஜெயக்குமாருக்கு இருக்கும் மாஸ், இந்த நிமிடம் வரை எடப்பாடியிடம் காட்டும் விசுவாசம், எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவை சீண்டி ஜெயிலுக்கு போன வரலாறு, இப்படி பல காரணங்களால் ஜெயக்குமார் மீதான நன்மதிப்பு எடப்பாடிக்கு அதிகமாகி விட்டதாம். மேலும், இதே பதவியில் அன்று கெத்து காட்டிய வடசென்னை மதுசூதனனை போல், தற்போது ஒட்டுமொத்த சென்னையில் ஜெயக்குமார் ஆக்டிவ்வாக இருப்பதாலும் இந்த பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, முக்கிய பதவியை தருவதற்கு இவைகளும் காரணமாக இருக்கக்கூடுமாம்.. இதற்கான முடிவு சில நாட்களில் வெளிவரலாம் என தெரிகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications