ரைட்டு..! "எடப்பாடி குரூரமானவர்.. ஓபிஎஸ்சுடன் சேர்ந்துக்க ஓகே.." டிடிவி தினகரன் அதிரடி பேட்டி!
சென்னை: எதிர்காலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பு உள்ளது என்று டிடிவி தினகரன் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அமமுகவிலும் பொதுக்குழு நடக்க உள்ளது. அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அதே வானகரத்தில் நடக்க உள்ளது. அமமுக துணை தலைவர் எஸ் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழ் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது.

டிடிவி தினகரன்
இந்த நிலையில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து டிடிவி தினகரன் டைம் ஆப் இந்தியா ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் அதிமுகவை கைப்பற்றும் போட்டியில் இல்லை. நாங்கள் அமமுக தொடங்கி 4 வருடம் ஆகிவிட்டது. தற்போது அமமுக பொதுக்குழு நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். டெல்லியை சேர்ந்த சில "நலம் விரும்பிகள்" திமுகவிற்கு எதிராக அமமுக, அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

பேட்டி '
ஆனால் அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை காரணமாக எடப்பாடி முதல்வர் வேட்பாளர் ஆக கூடாது என்று நான் கூறினேன். எனக்கு எடப்பாடி மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. ஆனால் அவர் முதல்வர் வேட்பாளர் ஆனால் அதிமுக கூட்டணி வெற்றிபெறாது என்று கூறினேன். ஆனால் அவர் முதல்வர் வேட்பாளராக தொடர பாஜக அனுமதித்தது. பழனிசாமியை நம்ப முடியாது. சசிகலாதான் அவரை முதல்வராக்கினார்.

குரூரம்
ஆனால் அப்படிப்பட்ட சசிகலாவிற்கே நடராஜன் மரணத்தின் போது 15 நாட்கள் பெயில் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர் பழனிச்சாமி. சட்ட ஒழுங்கை காரணம் காட்டி 5 நாட்கள் மட்டுமே பெயில் தர வேண்டும் என்று கூறினார். அப்போதுதான் அவர் எவ்வளவு குரூரமானவர் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் பதவிக்காக யாரை வேண்டுமானாலும் "முடிக்கும்" எண்ணம் கொண்டவர். பன்னீர் செல்வம் சசிகலாவிற்கு எதிராக சென்று தவறு செய்துவிட்டார்.

பழனிச்சாமி
ஆனால் அதை அவர் இப்போது ஏற்றும் கொண்டார். எதிர்காலத்தில் பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்பட கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் நாங்கள் மீண்டும் பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் சசிகலா பொதுச்செயலாளர் ஆவார். ஆனால் அமமுகதான் அம்மாவின் உண்மையான கட்சி என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் உணர்த்துவார், என்று டிடிவி தினகரன் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கொடுத்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications