புது பரபரப்பு.. கமலுடன் சீமான் கூட்டணியா.. றெக்கை கட்டி பறக்கும் தகவல்..!
சீமானுடன் கமல் கூட்டணி வைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: புது தகவல் ஒன்று கசிந்து வருகிறது.. கமலுடன் சீமான் கூட்டணி வைப்பாரா என்பதே அந்த கேள்வி..!
திமுக, அதிமுக கூட்டணிகள் முடிவாகாத நிலையில், அதற்கான இழுபறிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.. இன்னும் கூட்டணி இறுதிப்படுத்தப்படாததால், யார் யாருடன் கூட்டணி வைக்க கூடும் என்ற அனுமானங்களும் தினமும் எழுந்து கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் திமுக கூட்டணியில் கமலும் இடம் பெறுவார் என்று சொல்லப்பட்டது.. இதை சில நாட்களுக்கு முன்பு ஒரு டிவி பேட்டியில் ஸ்டாலினும் கூறியிருந்தார்.. மக்கள் நீதி மய்யத்துடனும் பேச வேண்டி இருக்கிறது என்றார்.
கமல் தனியாக அணி அமைத்தால், நிச்சயம் திமுக வாக்குகளை பிரிப்பார் என்பதே கணக்காக இருந்தது. அதனாலேயே வாக்குகளை சிதறடிக்காமல் அள்ளவே திமுக யோசித்தது.

கலக்கம்
இன்னொரு பக்கம், தன் கூட்டணியில் சீட் அதிக அளவு கிடைக்காத அதிருப்தி காரணமாக, எந்த கட்சியாவது பிரிந்து கொண்டு போய் கமலுடன் கூட்டணி வைத்துவிடுமோ என்ற கலக்கத்தினாலும் கமலை பிடித்து உள்ளே இழுத்துபோட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மய்யம் நடத்திய பொதுக்குழுவில் யாருடனும் கூட்டணி இல்லை என்று கமல் சொல்லி விட்டார்.

திமுக
அப்படியானால் இவர்களுக்குள் என்ன நடந்தது? என்ற சந்தேகம் எழுந்தது.. கமலுடன் கூட்டணி தொடர்பாக ஸ்டாலினின் குடும்ப உறவில் இருப்பவர் பேசியுள்ளார்.. அவர்தான் கூட்டணியை டீல் செய்து வருவதால் கமலுடனும் பேசியுள்ளார்.. ஆனாலும் பலமுறை பேசியும், கூட்டணி சரிப்பட்டு வரவில்லை என்பதால், அந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிகிறது.

கூட்டணியா?
இங்குதான் இன்னொரு சந்தேகத்தையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகின்றனர்.. ஏற்கனவே சீமானுடன் கமல் கூட்டணி வைப்பதாக ஒரு பேச்சு எழுந்தது.. ஆனால், கமலுடன் திமுக பேச்சு நடத்தவும்தான் சீமான் கொந்தளித்தார்.. தம்முடனும் பேசிக் கொண்டு இன்னொரு பக்கம் திமுகவுடனும் கூட்டணி பேசினால் எப்படி? என்பதே சீமானின் கோபமாக இருந்தது.. அதனாலேயே ஒருகட்டத்தில், செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போது கமலையும் விமர்சித்திருந்தார்.

மறுப்பு
இப்போது திமுகவுடன் , கமலுக்கு கூட்டணி இல்லை என்று உறுதியாகிவிட்டது.. இதை கே.என். நேருவும் இன்று உறுதிப்படுத்தி விட்டார்.. எனவே கமலுடன் சீமான் மறுபடியும் இணைவாரா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.. இது சம்பந்தமாக சீமானிடமும் கமல் தரப்பு பேசியதாம்.. ஆனால், "வேட்பாளர் லிஸ்ட் எல்லாம் அறிவித்தாகி விட்டது.. அடுத்த வாரம் பிரச்சாரத்தையே தொடங்க போகிறோம்.. இந்த நேரத்தில் கூட்டணி என்றால் அது சரி வராது.. கட்சியினரின் மனநிலைமையை கடைசி நேரத்தில் மாற்றி, அவர்களையும் திணறடிக்க முடியாது" என்று சொல்லிவிட்டாராம்..

புலம்பல்
இப்போது கமலுக்கு திமுகவும் இல்லை, சீமானும் இல்லை.. ஏதாவது ஒரு இடத்தில் சரியாக பேசி முடித்திருந்தால், கமல் இந்நேரம் பலமான கூட்டணி ஒன்றில் இணைந்திருப்பார்.. 2 பக்கமும் பேசி இப்போது இரண்டுமே இல்லாமல் போய்விட்டதே என்று புலம்புகிறது ஒரு தரப்பு..!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications