"ஒரே ஒரு" சீட்தானாமே.. பாஜகவை வெச்சு செஞ்சாலும்.. தேர்தலுக்கு பிறகு.."இறங்கி" வந்து அடிப்பாரா கமல்
கமல் கோவை தெற்கில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: ஒரே ஒரு சீட்தான் கமல் வெற்றி பெறுவார் என்று சொல்கிறார்கள்.. ஆனால், வெற்றியோ, தோல்வியோ, கமல் தன்னை இன்னும் விரிவுபடுத்தி கொள்ள வேண்டிய அவசியம் இந்த தேர்தலுக்கு பிறகு உருவாகி உள்ளது.
இந்த முறை கடுமையாக போராடிதான், அதிமுக தலைமையிடம் இருந்து கோவை தெற்கு தொகுதியை பாஜக வாங்கியது.. அதனால் திமுகவுடன்தான் போட்டி என்று பாஜக நினைத்து கொண்டிருந்தபோதுதான் கமல் இங்கு களம் இறங்கினார்.
மயிலாப்பூர், ஆலந்தூர், மதுரை என பல்வேறு தொகுதிகள் இருக்க, கோவை தெற்கில் வந்து கமல் ஏன் போட்டியிட்டார் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.. பிறகுதான், தொழில் வளர்ச்சி பெற்றால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் என்பதால், இந்த தொகுதியை குறி வைத்தது தெரியவந்தது.

பாஜக
இதையடுத்து தேர்தல் களமானது, திமுகவுக்கும் பாஜகவுக்கும் என்பது போய், கமல் Vs வானதி என்றே உருவெடுத்தது.. ஒவ்வொரு நாளும் பிரச்சாரங்கள் இந்த ஸ்டார் தொகுதியில் பரபரப்பை கூட்டி கொண்டிருந்தது. இப்போது, எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாருக்கு 26 சதவீத வாக்குகள்வரை பெற்று 3வது இடமும், கமல் - வானதி இருவருமே 36 சதவீதம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது..

அதிமுக
அதாவது அதிமுக வாக்குகள் பெருமளவு வானதிக்கு பதிவாகி இருக்கும்பட்சத்தில் வானதியே வெற்றி பெறக்கூடும் என்று கருதப்படுகிறது.. அதேசமயம், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களை கமல் பெறுவாரானால், கமலே வெற்றி பெறக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

சூப்பர்
ஒருவேளை கமல் இந்த ஒரே ஒரு சீட் வெற்றி பெற்றாலும், அது மிகப்பெரிய சக்ஸஸ்தான்.. கட்சி ஆரம்பித்து 3 வருடத்திலேயே இது ஒரு சாதனையும்கூட.. 10 வருடமாக சீமானால்கூட முடியாத விஷயத்தை கமல், பெறுவாரானால், அது பாராட்டத்தக்கதும்கூட.. இத்தனைக்கும் கமல் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அந்த அளவுக்கு பலம் வாய்ந்த் கட்சிகளே இல்லை..

கமலா? வானதியா?
தமிழ்நாட்டில் ஒரு சதவீதம்கூட வாக்கு வங்கி இல்லாத கட்சிகளுடன் கமல் ஏன் கூட்டணி வைத்தார்? என்ற முணுமுணுப்புகளும் எழுந்தன.. வானதியா? கமலா? என்ற இழுபறி இந்த நிமிடம் வரை தொடர்வதற்கும் மய்யத்தின் கூட்டணிதான் பெரிய மைனஸ் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதுக்கு கமல் தனியாகவே நின்றிருக்கலாமே, அப்படி நின்றிருந்தால், சீமானை போல ஒரு ஆளுமையை பெற்றிருக்கலாம்.. வானதியை தங்குதடையின்றி மிஞ்சியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அரசியல்
ஒருவேளை கமல், இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை தழுவினால்கூட, அதுவும் அவருக்கு மிகப்பெரிய பலத்தையே தந்துள்ளது.. காரணம், இந்த 2 மாத பிரச்சாரங்களில் திமுக கூட்டணியை அவர் திணறவிட்டுள்ளார்.. பாஜகவை கதறவிட்டுள்ளார்.. ஒரு சக்திவாய்ந்த வேட்பாளராகவே தன்னை நிரூபித்துள்ளார்.. இது அடுத்து வரும் அரசியலுக்கு கமலுக்கு நல்ல அனுபவத்தையே தரும்..

கிராமப்புறம்
இதைதவிர, மேல்மட்ட அரசியலையே கமல் செய்து கொண்டிருப்பதாகவும், கிராமப்புற மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு கமல் தவறிவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், இவைகளை நிவர்த்தி செய்ய கமல் முன்வர வேண்டும்.. கிராமப்புறங்களில் மட்டுமே இனி முழு கவனத்தையும் திருப்ப வேண்டி உள்ளது.

சீமான்
சீமானை போல, ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை களம் இறக்கியது போன்ற வித்தியாசமான, துணிச்சலான முயற்சிகளையும் இனி வரும் தேர்தல்களில் கமல் கையாள வேண்டும்.. ஒட்டுமொத்தத்தில், தமிழகத்தில் மேல்மட்ட அரசியலை கைவிட்டு, வெகுஜன மக்களின் நுட்பத்தையும் கமல் ஆழஊடுருவி அறிந்து செயல்பட்டால் நிச்சயம் பெரும்பாலான மக்கள் "நம்மவர்" ஆகலாம்..!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications