பறந்தது உத்தரவு.. குடிமகன்கள் தலையில் விழப்போகிறதா இடி?.. டாஸ்மாக் விவகாரத்தில் என்ன நடக்கிறது..!
தமிழகத்தில் மதுபானம் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: விரைவில் மதுபானங்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக உறுதியற்ற தகவல்கள் பரவி வருகின்றன.. இதையடுத்து மதுப்பிரியர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இப்போதுதான் லாக்டவுன் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது.. இதையடுத்து கடந்த சில தினங்களாகவே நிறைய பார்களில் மதுபானங்கள் விலையை அதிகப்படுத்தி விற்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அதற்கேற்றபடி, புதுச்சேரியில் திடீரென மதுபானங்கள் விலை அதிகமாகி உள்ளது.. கடைசியாக கடந்த 2018-ல் மதுபான விலை உயர்த்தப்பட்டது... ஆனால், இப்போது 3 வருடங்களுக்கு பிறகு மதுபான விலையை உயர்த்தி இருப்பது மதுபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஊரடங்கு
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக, நாமக்கல் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் கடந்த வாரம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன... ஆனால், அதிகாரிகளுக்கு அப்போதுதான் ஒரு ஷாக் காத்து கிடந்தது.. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மது விற்பனையே இல்லை..

குடோன்
இதனால், ஊரடங்கிற்கு முன் குடோன்களில் விற்காமல் இருந்த, 90 நாட்களுக்கும் மேலான மதுபானங்களை மட்டுமே, சில்லரை விற்பனைக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, கடந்த, 50 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் பிரீமியம் எனப்படும் பழைய மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனராம்..

விற்பனை
கடந்த, 10 நாட்களாகவே 100 முதல் 150 ரூபாய் வரை உள்ள மதுபானங்கள் விற்பனை முடிந்து விட்டது.... ஆனால், 200 ரூபாய்க்கு மேல் உள்ள புதிய ரக மதுபானங்கள் விற்பனையாகாமல் உள்ளன... அந்த மதுபானங்களை குடிமகன்களுக்கு கட்டாயமாக விற்பனை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..

உத்தரவு
அதாவது பழைய விலை மதுபானங்களை விற்பனை செய்து முடிக்க, அனைத்து கடை சூப்பர்வைஸர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது... இந்த தகவல்கள் காரணமாக, மதுப்பிரியர்கள் கதிகலங்கி போயுள்ளனர்.. எனினும் மதுபானங்கள் விலை உயர்த்தப்படுமா? இல்லையா? இது வதந்தியா? அல்லது அரசு அறிவிப்பு இனிமேல்தான் வருமா? தெரியவில்லை.. பார்ப்போம்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications