Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் குறித்து மக்கள் புகார் அளித்தால்.. 30 நாளில் தீர்வு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சில டாஸ்மாக் மற்றும் தனியார் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. இந்த விவகாரத்தில் அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Will many TASMAC shops be closed What is the TN government s order changing the 50 meter rule

டாஸ்மாக் கடைகள் நேரம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும், மனமகிழ் மன்றம் பெயரில் தனியார் மதுபான பார்களும் அதிக அளவில் உள்ளன. டாஸ்மாக் பெயரில் அரசும், மனமகிழ் மன்றம் என்ற பெயரிலும் தனியாரும் மதுக்கடைகளை நடத்துகிறார்கள். டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் தனியார் பார்களும், மனமகிழ் மன்றங்களும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகின்றன. அதேநேரம் அவ்வப்போது சில மதுபான பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

50000 கோடி வருமானம்

தமிழ்நாட்டினை பொறுத்தவரை மதுவால் தினமும் 100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. ஓராண்டில் சுமார் 45000 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த நிதியாண்டில் வந்த வருமானத்தில் தெரியவந்துள்ளது. வரும் ஆண்டில் 50000 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மதுவால் அரசுக்கு வருமானம் கிடைத்தாலும், அது சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்தாமல் இல்லை..

மது அவமானம்

மதுவால் வருமானம் வந்தாலும், பலர் இளம் வயதிலேயே இறந்து போகிறார்கள். அதேபோல் 16 வயது 21 வயது நிரம்பாத இளைஞர்கள் போதையின் பாதையில் விழுவதும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் மதுக்கடைகளில் மது வாங்கியவர் அதை மறைத்து மறைத்து எடுத்து செல்வார்கள். மது அருந்தி இருந்தால், வெளி உலகில் அசிங்கமாக பார்ப்பார்கள் என்ற பயத்தில் வெளியில் செல்லவே மாட்டார்கள். மது அருந்துவதை அவமானமாக கருதுவது தான் கலாச்சாரமாக இருந்து வந்தது.

மதுவுக்கு அடிமை

ஆனால் இன்றைக்கு ஒரு தலைமுறையே மதுவுக்கு அடிமையாகி உள்ளது. இதன் எதிரொலியாக மதுக்கடைகள் எங்கு திறந்தாலும் கூட்டம் கூட்டமாக வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இரவு 9 மணிக்கு மேல் மதுக்கடையில் மது வாங்குவது என்பது ரேஷன் கடையில் அரிசி வாங்குவதை கடினமாக இருப்பதாக குடிமகன்கள் கூறுகிறார்கள்.

சாலையில் சேட்டை

அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. மதுபானங்களை வாங்கும் நபர்கள், அங்கேயே குடித்துவிட்டு வாந்தி எடுத்து விழுந்து விடுவதும் அதிகமாக நடக்கிறது. அதேபோல் குடிபோதையில் சாலையில் செல்வோரிடம் அலம்பல் செய்வதையும் காண முடியும்.குடிந்த உடன் சாலையில் அசிங்கமான வார்த்தைகளை பேசுவோரும் அதிகமாக இருக்கிறார்கள்.

வழிபாட்டு தலங்கள்

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டுத் தலங்கள் அருகிலோ அல்லது பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குடிபோதையில் சிலர் செய்யும் செயல்கள் அநாகரீகமாக இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

50 மீட்டர் தொலைவில் கடைகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 50 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று விதி உள்ளது. அதேபோன்று மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைகள் திறக்க விதிகள் இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது.

விதிகளில் மாற்றம்

பொதுவாக டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சில டாஸ்மாக் மற்றும் தனியார் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அரசாணை என்ன

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், " டாஸ்மாக் கடைகள் நிறுவப்பட்ட பகுதியிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள தூரத்திற்குள் எந்தவொரு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் இருந்தாலும் கடைகள் திறப்பதற்கான விதிகள் பொருந்தாது. அதேபோல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அதில் வழங்கப்பட்ட தகுதிகள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+