Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினுக்கு "தலைவலி".. கூட்டணியில் வெடித்த குரல்..விஸ்வரூபமெடுக்கும் விக்னேஷ் மரணம்..லாக்கப் டெத்?

விக்னேஷ் மரணத்திற்கு சிபிசிஐடி விசாரணை கேட்கிறார் சிபிஎம் பாலகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சிபிம் கட்சியின் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து அனைத்து காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 புரசைவாக்கம்

புரசைவாக்கம்

4 நாட்களுக்கு முன்பு, தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.. அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி ஸ்டேஷன் எஸ்ஐ பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் ஆட்டோவை மடக்கி விசாரித்தனர்.

 விக்னேஷ், சுரேஷ்

விக்னேஷ், சுரேஷ்

விசாரணையின்போது விக்னேஷும், சுரேஷும் குடி போதையில் இருந்துள்ளனர். 2 பேரும் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது... மேலும், ஆட்டோவுக்குள் கத்தி, கஞ்சா பொட்டலமும் இருந்திருக்கிறது.. இதையடுத்து, திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்ற 28 வயது இளைஞரையும், பட்டினபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 28 வயது இளைஞரையும், போலீசார் விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

 இரவில் விசாரணையா?

இரவில் விசாரணையா?

அவர்களை இரவுநேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.. ஆனால், இருவரின் வீட்டுக்கும் போலீசார் தகவல் எதுவும் சொல்லவில்லை.. இந்நிலையில் விக்னேஷ்க்கு மறுநாள் காலையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. உடனடியாக அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்... ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்..

 வலிப்பு நோய்

வலிப்பு நோய்

இதனால் உறவினர்கள் கொந்தளித்து விட்டனர்.. விக்னேஷின் முகத்திலும், தோல் பட்டையிலும் காயங்கள் இருந்ததாக விக்னேஷின் உறவினர்கள் சொல்கிறார்கள்.. விசாரணை என்கிற பெயரில் விக்னேஷை அடித்துக் கொன்று விட்டார்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் குற்றஞ்சாட்டினார்கள். அதைவிட முக்கியமா, போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும் விக்னேஷின் உடலை அவரது உறவினர்களிடம் கூட தெரிவிக்காமல் காவல்துறையே தகனம் செய்துள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

விக்னேஷ்

விக்னேஷ்

ஆனால் திடீரென வலிப்பு வந்துவிட்டதால்தான், விக்னேஷ் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. விக்னேஷ் இறந்த கையோடு சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்துள்ளனர். மாஜிஸ்திரேட்டின் விசாரணை இதில் நடந்தாலும், எதிர்க்கட்சிகள் கடுமையான கொந்தளிப்பில் உள்ளன.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல் அமமுக தினகரன் வரை, இது தொடர்பாக கேள்வி எழுப்பி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளது.

 இளைஞர் சுரேஷ்

இளைஞர் சுரேஷ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இது தொடர்பாக ஒரு அறிக்கையே வெளியிட்டுள்ளார்.. அதில், "கைது செய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, மருத்துவர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ், காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக காவல் நிலையத்திலேயே இறந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 சிபிஎம் பாலகிருஷ்ணன்

சிபிஎம் பாலகிருஷ்ணன்

இதுமட்டுமின்றி, விசாரணைக் கைதியின் உறவினர்கள் சுமார் 48 மணி நேரம் சட்ட விரோதமாக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.. தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகளின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்தும், வாலிபர் சுரேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்..

 சிக்கல் கூடுகிறது

சிக்கல் கூடுகிறது

எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி கேட்ட நிலையில், இன்று திமுகவின் கூட்டணி கட்சியே இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில், அரசுக்கு சிக்கல் கூடிஉள்ளது.. அன்று பென்னிக்ஸ் மரணத்திற்கு குரல் கொடுத்தவர்கள், இந்த லாக்கப் டெத் தொடர்பாக ஏன் வாய் மூடி இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+