குழம்புறாரே ஜவாஹிருல்லா.. அப்ப திமுகவுக்கு வேலை செய்யணுமா? டக்னு இந்த முடிவு? திருச்சியில் புயலு-ங்க
சென்னை: 1 சீட்டும் தரவில்லை - கூட்டணியிலும் இல்லை.. ஆனாலும், யாருக்கு ஆதரவு தருவது? எப்படி தருவது? என்ற குழப்பத்தில் உள்ளது மனித நேய மக்கள் கட்சி.
இந்த முறை எப்படியாவது, திமுக கூட்டணியில் இடம் பிடித்துவிடுவது என்பதில் மனித நேய மக்கள் கட்சி முனைப்பு காட்டியது.. இதையடுத்து, திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையேயான 2வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில் மூத்த தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது.

இதில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் ப. அப்துல் சமது, பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நம்பிக்கை: இந்த சந்திப்புக்கு பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் சொன்னபோது,போட்டியிட ஒரு தொகுதியை கேட்டிருக்கிறோம். 40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம்... கடந்த சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றி பெற்றோம். எங்களுடைய கோரிக்கையை திமுக தொகுதி பங்கீடு குழு பரிசீலிப்பதாக சொல்லி உள்ளது.. இந்தியா முழுமைக்கும் எடுத்துக்காட்டான கூட்டணியை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.
ஆனால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டன.. ஆனால், மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.. 1 சீட் கூட தராமல், கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், வருத்தத்தில் அக்கட்சி உள்ளதாக தெரிகிறது...
திமுக கூட்டணி: கூட்டணியில் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றாலும், திமுக சீட் தருமா என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், மனிதநேய மக்கள் கட்சியின் அவசர உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தை, ஜவாருல்லா 2 நாட்களுக்கு முன்பு கூட்டியிருந்தார்..
இந்த கூட்டத்தில் வெறும் புலம்பலும், அதிருப்தியும், வருத்தமும் வெடித்ததாக தெரிகிறது. "ரொம்ப எதிர்பார்த்தோம்.. திமுக ஏமாற்றி விட்டது. கடந்த எம்பி தேர்தலிலும் சீட் இல்லை, இந்த முறையும் சீட் இல்லை என்றால், எதுக்காக திமுகவுக்காக நாம தேர்தல் வேலை செய்யணும்? வேண்டுமானால், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தோழமை அடிப்படையில் தேர்தல் பணியாற்றலாம் அல்லது கூட்டணியை விட்டு வெளியேறலாம்" என்றெல்லாம் நொந்து போய் பலரும் பகிர்ந்து கொண்டார்களாம்.
ஜவாஹிருல்லா: எனினும், எந்தவித முடிவுக்கும் உடனடியாக வர முடியாத சூழலில், மீண்டும் இன்றைய தினம் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.. ஜவாஹிருல்லா தலைமையில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்துக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் பங்கேற்க உள்ளனர்.. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக அலசப்பட்டு, ஒரு இறுதி எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
அதாவது, தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதைவிட, கமலுக்கு சீட் தந்ததைதான் ஜீரணிக்க முடியாமல் உள்ளதாம்.. காரணம், மனித நேய மக்கள் கட்சியை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் கட்சியாகும்.. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்கக்கூடிய கட்சியும்கூட.
கமலுக்கு சீட்: ஆனால் கமல் அப்படியில்லை.. தொடர்ந்து திமுகவை விமர்சித்துவந்தவர்.. திடுதிப்பென்று கூட்டணியில் சேர்ந்ததுடன், சூட்டோடு சூட்டாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தரப்பட்டுள்ளது. இதுதான், கடும் அதிர்ச்சியை மமக தரப்புக்கு ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
இப்போ வந்த கமலுக்கு கூட சீட் தந்து ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இத்தனை வருஷமாக, திமுக வெற்றிக்காக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்க குரல் வெடித்துள்ளதால், கூட்டணியிலிருந்து மமக வெளியேறுமா? அல்லது விசிக, கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தேர்தல் பணிகளை செய்யுமா? அல்லது திமுகவின் வெற்றிக்கும் சேர்த்தே பாடுபடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications