திமுக நல்லாவே இறங்கி வந்தாலும்.. "இது" ஒன்னுதான் சிக்கலாமே.. கமலை கைக்குள் கொண்டு வர!
சென்னை: கமலை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கி வந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சிக்கலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்தனை காலமும் இல்லாமல், இந்த ஒரு வார காலமாக திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கை கோர்க்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இந்த விஷயத்தை கமலிடம் நேரடியாக கேட்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

எனினும் கசிந்து வரும் தகவல் இன்னும் வேகமெடுத்து கொண்டுதான் வருகிறது.. சென்னைக்கு அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டில் உதயநிதி ஸ்டாலினும், கமலும் ஏற்கனவே சந்தித்து பேசி கொண்டார்களாம்.. டிவி ஓனருக்கு சொந்தமான பண்ணை வீடாம் இது.. உதயநிதியிடம் கமல் 40 சீட் கேட்டாராம்.. அதற்கு அதிகபட்சமாக 25 சீட் தருகிறோம் என்று உதயநிதியும் சொன்னாராம்.
இதற்கு முக்கிய காரணம், சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதறிவிடும் என்பதாலேயே கமலை தம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது திமுக வின் திட்டமாம். சீட், தொகுதி விஷயங்களில் கூட முன்னே பின்னே உடன்பாடு ஏற்பட்டுவிடும், ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்தான் சிக்கல் வரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
கமல் தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சி அறிவித்துள்ள நிலையில், ஸ்டாலினை எப்படி முதல்வராக கமல் ஏற்றுக் கொள்வார் எனவும், சிலர் கேள்வி எழுப்புகின்றனர்... இன்றைக்கு கமல் செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று சொல்லி உள்ளார்.. ஆக, கமலுக்கு முதல்வர் ஆசை உள்ளதால், திமுகவில் அவர் கணக்கு செல்லுபடியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
ஒருவேளை கமல் கொஞ்சம் இறங்கி வந்து, திமுகவுடனே கூட்டணி வைத்தால் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் மநீம உண்டுபண்ணும் என்றும் சொல்கிறார்கள். பார்ப்போம்!












Click it and Unblock the Notifications