Erode East: விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? நாதக சீமானுக்கு பாடம் கற்றுதந்த பெரியார் மண்!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5ஆவது சுற்று முடிவில் திமுகவின் சந்திரகுமார் 115709 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக சீதாலட்சுமி 24151 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சூழலே நிலவும் என்றாலும் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிக வாக்குகளை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் 24 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாதகவுக்கு தோல்வியிலும் வெற்றி என்ற நிலைப்பாடுதான் ஏற்பட்டுள்ளது.

பகுத்தறிவு பகலவன் பெரியாரை எந்த அளவுக்கு அவதூறாக பேச முடியுமோ அந்த அளவுக்கு சீமான் கடுமையாக விமர்சித்துவிட்டார். இதனால் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அப்போது முதலே முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாக திராவிட கட்சிகள் விமர்சித்து வந்தன.
மேலும் தமிழகமே பெரியார் மண் என்றாலும் அதில் உள்ள ஈரோடு தொகுதி என்பது பெரியார் பிறந்த ஊர் ஆகும். தமிழகத்திலேயே பெரியாருக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது அவருடைய சொந்த ஊரில் கேட்கவே வேண்டாம்.
அந்தளவுக்கு பெரியாரின் சீர்திருத்தங்களால் பெரும்பாலானோர் பயனடைந்து வருகிறார்கள். ஏற்கெனவே சீமான் பெரியாரை பேசிவிட்டார் என தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருந்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சீமானுக்கு எதிராக பலர் கொந்தளித்தனர். மேலும் வேட்பாளர் சீதாலட்சுமியிடமும் பலர் "பெரியாரை உங்கள் தலைவர் (சீமான்) இழிவாக பேசிவிட்டு இங்கேயே வந்து வாக்கு கேட்பாரா என கோபப்பட்டனர்.
அவர்களை வேட்பாளர் சமாதானப்படுத்தினார். இந்த நிலையில் இந்த முறை நடக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே போட்டியிடுவதால், நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கடந்த தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க்கலாம். அதாவது 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகளை பெற்றார். அவருடைய வாக்கு சதவீதம் 6.98 ஆகும்.
2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் போட்டியிட்டார். அவர் 10,827 வாக்குகளை பெற்று, 6.35 வாக்கு சதவீதத்தை பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 2023 இல் நாதகவுக்கு வாக்கு சதவீதமும் வாக்குகளும் குறைவுதான். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளும் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு 24 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரத்து சொட்சம் வாக்குகளில் டெபாசிட் இழந்தாலும் நாதகவின் வாக்கு சதவீதம் இந்த முறை அதிகரித்திருக்கும்.
இதற்கு காரணம் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க விரும்பும் அதிமுக, தேமுதிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளும் திமுக எதிர்ப்பாளர்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்திரு்கக வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதாவது வழக்கமாக கடந்த தேர்தல்களை போல் இந்த முறையும் நாதகவுக்கு எப்போதும் வரவேண்டிய 10 ஆயிரம் ஓட்டுக்களுடன் அதிருப்தியாளர்களின் ஓட்டுக்கள் 10 ஆயிரமும் கிடைத்துவிட்டது என்றே கருதப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications