"வாடகை தாய்".. விசாரணை வளையத்தில் நயன்தாரா - விக்னேஷ்? அதிகாரிகள் முடிவிற்கே விட்ட அமைச்சர் மா.சு
சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிப்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த நிலையில் சட்டப்படி இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டது சரியா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் வாடகைத்தாய் தடை சட்டம் உள்ளது. ஆனால் இதில் சில விதி விலக்குகள் உள்ளன.
மொத்தம் இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார்.

தடை
இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதற்கு இந்தியாவில் முழுமையாக தடை இல்லை. விதி விலக்குடன் இதற்கு அனுமதி உள்ளது. இப்படித்தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.

சட்டம்
ஒரு ஆண் - பெண் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருந்தால் மட்டுமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள் முடியும். அதற்கும் நிறைய விதிகள் உள்ளன. அப்படி இருக்கும் போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்ட விதிகளை இவர்களை மீறிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இது பற்றி விசாரணை செய்வோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

அமைச்சர்
இன்று இது தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார். நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் சுகாதாரத்துறை விசாரணை நடத்துமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மா. சுப்பிரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிப்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து என்ன செய்ய வேண்டும் முடிவெடுப்பார்கள், என்று விளக்கம் அளித்தார்.

நேற்று என்னசொன்னார்?
அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில், பொது சுகாதாரத்துறையின் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொண்டார்களா என்று விளக்கம் கேட்கப்படும். 21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும் என்ற விதி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு விதிகள் உள்ளன. இந்த விதிகளை அவர்கள் பின்பற்றினார்களா என்று விளக்கம் கேட்கப்படும், என்று கூறினார். நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் நயன்தாரா குழந்தை பற்றி எழுப்பிய கேள்விக்குதான் அமைச்சர் இவ்வாறு, பதிலளித்தார். இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எதிராக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஏதோ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தானாக முன்வந்து விசாரணைக்கு இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. பிறருடைய தனிப்பட்ட வாழ்க்கை.. குறிப்பாக நடிகை என்பதால் இவ்வாறு அமைச்சர் நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இருப்பினும் பத்திரிக்கையாளரின் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு வேறு எப்படிதான் அமைச்சர் பதில் அளிக்க முடியும். விசாரிக்கிறேன் என்றுதானே கூற முடியும் என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வந்த நிலையில் சர்ச்சைகளில் இருந்து விடுபடும் வகையில் இந்த விவகாரத்தை அதிகாரிகள் கையாள்வார்கள் என்று மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications