என்னங்க இப்படி நடக்குது? ஓபிஎஸ் வீட்டில் கேட்ட "புலம்பல்".. உ.பி சம்பவம் தெரியுமா? பிளைட் ஏற முடிவு!
சென்னை: என்னதான் வெளியே திடகாத்திரமாக பேசினாலும்.. சட்ட போராட்டங்களை நடத்தினாலும்.. கட்சியில் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்ற வருத்தத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனக்கு நெருக்கமான சிலரிடம் நேற்று அவர் புலம்பியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்ததில் இருந்தே கட்சியில் பல்வேறு பரபரப்புகள் நடந்து வருகின்றன. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிவிட்டார்.
அதை தொடர்ந்து பொதுக்குழு அன்றே ஓ பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

நீக்கம்
அதன்பின் எடப்பாடி பழனிசாமி வேகம் காட்ட தொடங்கினார். கட்சியில் புதிய நிர்வாகிகளுக்கான நியமனத்தை அறிவித்தார். அதன்படி அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமி வகித்த பதவி ஆகும். இது போக தலைமை கழக உறுப்பினர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அடுத்தடுத்து நீக்கம்
இந்த நிலையில்தான் கட்சி விதிகளை மீறியதாக கூறி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஜெயபிரதீப், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன். முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், மருது அழகுராஜ் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு போட்டியாக எடப்பாடி உள்ளிட்ட 22 பேரை ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கினார்.

மோதல்
இந்த நிலையில்தான் கட்சியில் நடக்கும் தொடர் நிகழ்வுகளால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக குடும்பத்தினர், ஆதரவாளர்கள் எல்லாம் கூண்டோடு நீக்கப்பட்டு உள்ளனர் என்பதால் ஓபிஎஸ் தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். நேற்று இது தொடர்பாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனையும் செய்யப்பட்டு இருக்கிறது. சட்ட வல்லுனர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்துள்ளார்.

ஆலோசனை
அந்த ஆலோசனையில்.. என்னதான் சட்ட ரீதியாக போராட்டம் செய்தாலும் சில விஷயங்கள் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் வரும் போது மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கும் அதிகம் என்று தேர்தல் ஆணையம் பார்க்கும். அதை வைத்தே முடிவு செய்யும்.. உ.பியில் அகிலேஷுக்கு இப்படித்தானே நடந்தது? அந்த வகையில் பார்த்தால் எடப்பாடிக்கே சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று ஓ பன்னீர்செல்வத்திடம் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே வழி
அதிமுகவில் இப்படி நாம் மீண்டும் சேர ஒரே வழி மொத்தமாக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மனது வைத்தால் மட்டுமே அது நடக்கும். டெல்லியில் இருந்து கொஞ்சம் அழுத்தம் வந்தால் நமக்கு சாதகமாக முடிவு வரலாம். ஆனால் அதற்கு நீங்கள் டெல்லியில் காய் நகர்த்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அவரின் வழக்கறிஞர் தரப்பு ஆலோசனை வழங்கி இருக்கிறதாம். அதாவது கோர்ட்டுக்கு போனால் எதுவும் நடக்காது.
Recommended Video

கோர்ட்
உச்ச நீதிமன்றம் பொதுக்குழு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று சொல்லிவிட்டது. எனவே கோர்ட் எதற்கும் பயன் அளிக்காது. தேர்தல் ஆணையம்தான் நமக்கு சாதகமாக நிற்க வேண்டும். டெல்லியில் பேசுங்கள் என்று சட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம். இதை கேட்ட ஓ பன்னீர்செல்வம் மீண்டும் டெல்லிக்கு பிளைட் ஏற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் திங்கள் அல்லது செவ்வாய் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் டெல்லிக்கு செல்வார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications