கடலூரையே தங்கர் பச்சான் "சாய்க்கிறாரே".. மாந்தோப்புக்குள் "ரெடியான" பாமக.. மலைக்கும் திராவிட கட்சி?
சென்னை: கடலூரின் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்தான் என்று சொன்னதுமே, இளைஞர்கள் மனதில் ஏகப்பட்ட சந்தோஷம்.. அதற்கேற்றவாறு, தன்னுடைய பிரச்சாரத்தையும் ஜரூராக துவங்கியிருக்கிறார் பிரபல டைரக்டர் தங்கர் பச்சான்.
தங்கர் பச்சானுக்கு பாமக சீட் தந்துள்ளது.. பல வருட காலமாகவே, பாமகவின் நிலைப்பாட்டை ஆதரித்து வருபவர் என்றாலும், முதன்முதலாக தங்கர் பச்சான், அரசியலில் களமிறங்கியிருப்பதால் அவருக்கான எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

பதில்கள்: மீடியாக்கள் தங்கர் பச்சானிடம் எழுப்பும் முதல்கேள்வியே, பாமகவுடன் ஏன் இணைந்தீர்கள்? என்பதாகவே இருந்து வருகிறது.. கேள்விகள் எப்படி இருந்தாலும், தங்கர் பச்சானின் பதில் தீர்க்கமாகவே இருந்து வருகிறது.
"மொழி, இன உரிமைக்காக போராட்டம் நடத்திய பாமகவை பார்த்துவிட்டுதான் அந்த கட்சியில் இணைந்துள்ளேன். பாமகவின் அனைத்து செயல்பாடுகளையும் பார்த்துவிட்டு, கட்சியின் கொள்கை ஒத்துப்போனதால்தான் இப்போது போட்டியிடுகிறேன்.
உள்நோக்கம்: எந்த உள்நோக்கத்துடனும் அரசியலுக்கு வரவில்லை. என்னுடைய மண், மொழி, இனம், மக்களுக்கு எந்தவொரு சிக்கல் வந்தாலும் முதல் ஆளாக நின்றுள்ளேன். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. அண்ணா, பெரியார், அம்பேத்கர் போட்டோக்களை வைத்து மற்ற கட்சிகள் "தொழில்" செய்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் கொள்கைகளையும், பெரியாரின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சென்று களத்தில் இறங்கி போராடியது பாமகதான்" என்று உரக்க சொல்கிறார் தங்கர் பச்சான்.
அதுமட்டுமல்ல, பாமகவின் கடலூர் வேட்பாளர் தங்கர்பச்சானை, கூட்டணி கட்சியினரிடையே அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நேற்று முன் தினம் கடலூரில் நடந்தது.. அப்போது தங்கர் பச்சான் பேசியது, இப்போதுவரை இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
பரதேசிகள்: நான் 7 வயதில் பார்த்த கடலூர், 62 வயதிலும் அப்படியேதான் இருக்கிறது.. எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும், எத்தனை எத்தனை தலைவர்கள் வந்தாலும், என்னுடைய மக்கள் எப்பவுமே பரதேசியாகவே இருக்கிறார்கள்.. தலைவர்களின் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து போயிருக்கிறோம். அந்த கோபத்தின் வெளிப்பாடாகவே நான் இப்போது வேட்பாளராக நிற்கிறேன்.
இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் நமக்கு உயர்வு.. எந்த சின்னத்தைப் பார்த்து வாக்களிக்காமல், தகுதியை பார்த்து வாக்களியுங்கள். மக்களின் நலனுக்காக நான் யார் காலில் வேண்டுமானாலும் விழுவேன். எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு நல்லது, இல்லாவிட்டால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை என்று தங்கர் பச்சான் பேசியதுமே கைதட்டல்கள் அரங்கத்தை அதிர வைத்தது.
வாழ்த்துக்கள்: தங்கர் பச்சான் நிகழ்ச்சி என்றதுமே, ஏராளமான இளைஞர்களை இந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.. பல இளைய சமுதாயத்தினர் திரண்டு வந்து, தங்கர் பச்சானுக்கு வாழ்த்து சொன்னதுடன், அவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
இந்த அறிமுக கூட்டம் முடிந்ததுமே, பிரச்சாரத்தை துவங்கிவிட்டார் தங்கர் பச்சான்.. தன்னுடைய சொந்த கிராமமான பண்ருட்டி அருகிலுள்ள பத்திரக்கோட்டையில் உள்ள தன்னுடைய மாந்தோப்பிலேயே, இந்த பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த கிராமத்திலிருக்கக்கூடிய முக்கிய பிரமுகர்கள், பாமக, பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் என பலரும் திரண்டு மாந்தோப்புக்கு வந்திருந்தனர்..
அடையாளம்: அவர்களிடையே பேசிய தங்கர் பச்சான், "இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்... கும்பல் கும்பலாக கூடிப் பேசாமல், தனித்தனியாகச் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் இனிமேல் நாம் ஈடுபட வேண்டும். எதிரணியினராக இருந்தாலும் என்னிடம் அடையாளம் காட்டுங்கள். அவர்களிடம் நான் பேசி வாக்குகளை பெறுகிறேன்...
15 வருடதுக்கும் மேலாக நான் பாமகவுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். இப்போதுதான், அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன்.
சோஷியல் பிரச்சாரம் செய்வது மட்டும் நோக்கமாக நமக்கு இருக்கக் கூடாது.. காரணம், அதெல்லாம் வாக்காக நமக்கு மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால், அது பல லட்சம் வாக்குகளாக மாறும்.. நம்மை எதிர்த்து யார் நிற்பதை பற்றியும் கவலைப்படாதீங்க.. நம்முடைய பணியை நாம் செய்வோம் என்றார் தங்கர் பச்சான்.
அதிருப்திகள்: பாஜகவுடன் கூட்டணி வைத்தது, பாமக தொண்டர்களுக்கு அதிருப்தியை தந்துவருவதாக தகவல்கள் வெளியாகியவண்ணம் இருக்கும்போது, தங்கர் பச்சான் முன்னெடுத்துள்ள இந்த பிரச்சார பயணம் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவை தரப்போகிறது என்கிற ஆர்வம் எழுந்துள்ளது..
அதைவிட முக்கியமாக, "உலக அளவில் திருக்குறள் பிரபலம் அடைய பிரதமர் மோடி ஒரு காரணமாக இருக்கிறார்" என்று தங்கர் பச்சான் தற்போது சூட்டியிருக்கும் புகழாரம், பாமகவுக்கு எந்த அளவுக்கு வெற்றியை தரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பையும் அதிகமாகவே கிளப்பிவிட்டுள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications