விடிவுகாலம்! கலங்கி நின்ற தனியார் ஊழியர்களை.. இன்பத்தில் ஆழ்த்திய முடிவு.. அரசின் பெரிய திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் நிறுவனங்களின் பணி புரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச பென்சன் தொகையை 9000 ரூபாயாக அதிகரிக்க ஆலோசனை நடந்து வருகிறதாம். இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முக்கியமான போராட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) ஒழுங்குபடுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 12% பங்களிக்கின்றனர். நிறுவனங்களும் இந்த 12% பங்களிப்பை EPFO ​​வில் டெபாசிட் செய்கின்றன.

jobs job old pension scheme pension

இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும் - 8.33% பங்களிப்பு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது மற்றும் 3.67% EPF திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது.

2014 முதல், இபிஎஸ்-1995 இன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 1000 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இபிஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ஓய்வூதியத்தை மாதம் 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பான EPS-95 தேசிய போராட்டக் குழு டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. குறைந்தபட்ச மாத பென்சன் தொகையை 7500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்,

பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை: சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக இதில் முன்பு கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது பல லட்சம் ஊழியர்களின் பல வருட கோரிக்கை.. ஆனால் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு உடைந்துள்ளது. புதிய முறையே மாற்றம் இன்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் சிறார்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம், என்பிஎஸ் வாத்சல்யா எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை வயது வந்தவுடன், அதாவது 18 வயதை எட்டியதும் இந்தத் திட்டம் சாதாரண NPS ஆக மாற்றப்படும். பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுக்கு ஓய்வூதியத்தைத் திட்டமிடலாம். என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தின் கீழ், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பங்களிக்க முடியும். என்.பி.எஸ் வாத்சல்யா என்பது சிறார்களுக்கான திட்டமாகும், இதில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் பங்களிக்க முடியும். குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இந்த திட்டம் வழக்கமான NPS ஆக மாற்றப்படும். இதை தவிர பென்சன் தொடர்பான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ரத்து செய்தனர். ஏப்ரல் 2004 க்குப் பிறகு அந்தந்தப் பணியில் சேர்ந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ளனர். அப்போதிருந்து, பழைய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. 2004 ஆம் ஆண்டுக்கு முன் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளதால், அவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பழைய முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளது. ஆனால், இப்போது தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக உத்தரவாதம் அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது கடைசி மாதம் நீங்கள் உங்கள் பணியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால்.. உங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இது பழைய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு முறையாகும். அதை புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வர உள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2024ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டில் புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்பட்டது..

பென்ஷன் மாற்றம்: பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை சில மாற்றங்களுடன் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது பல லட்சம் ஊழியர்களின் பல வருட கோரிக்கை.. ஆனால் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு உடைந்துள்ளது. புதிய முறையே மாற்றம் இன்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+