இன்று சிஎஸ்கே போட்டி நடக்குமா.. முதல் ஹோம் மேட்சிலேயே இப்படியொரு சிக்கல்? வானிலை மையம் தந்த அலர்ட்!
சென்னை: இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி லக்னோவை எதிர்கொள்கிறது. இதனிடையே போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதே இப்போது கேள்வி எழுந்துள்ளது.
உலகின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கிரிகெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் மவுசு கூடிக் கொண்டே இருக்கிறது.
2008இல் ஐபிஎல் முதலில் ஆரம்பித்த போது, அது இவ்வளவு சீக்கிரம் அசுர பாய்ச்சலைப் போடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அதன் ரசிகர் பட்டாளம் கூடிக் கொண்டே இருக்கிறது.

ஐபிஎல்
இந்த நிலையில், 16ஆவது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியனும் மிகவும் வெற்றிகரமான அணியாகவும் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு வேற லெவவில் இருக்கிறது. கடந்தாண்டு ஜடேஜா தலைமையில் தான் முதலில் சில போட்டிகளில் விளையாடியது. ஆனால், இந்த முறை தல தோனி தலைமையில் தான் தொடக்கத்தில் இருந்தே களமிறங்குகிறது..

சிஎஸ்கே
4 முறை சாம்பியன், 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி, சாம்பியன்ஸ் லீக் கோப்பை எனப் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தாண்டும் மிகவும் வலிமையான அணியாகவே சென்னை பார்க்கப்படுகிறது. 7 பேட்ஸ்மேன்கள், 9 ஆல் ரவுண்டர்கள், 10 பந்துவீச்சாளர்கள் என்று பக்காவான அணியாகவே சென்னை இந்த முறை இறங்கியுள்ளது. ஆனால், துருதிஷ்டவசமாக முதல் போட்டியில் சென்னைக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

முதலில் தோல்வி
முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு நல்ல ஒரு தொடக்கம் கிடைத்தது. அடுத்த வந்த வீரர்களும் அதை அப்படியே எடுத்துச் செல்ல குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெத் ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்தே சென்னை தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டி
இந்தச் சூழலில் சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் மட்டும் நடத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தச் சென்னை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு
இதற்கான டிக்கெட்கள் அரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததே இதற்குச் சாட்சி... கடந்த போட்டியில் வெற்றியின் அருகே வந்து தான் சென்னை தோல்வியடைந்திருந்தது. டெத் ஓவர்கள் தான் இப்போது சென்னைக்குப் பிரச்சினையாக உள்ளது. இருப்பினும், கடந்த போட்டிக்குப் பிறகு அளித்த பேட்டியிலும் கூட பவுலர்கள் மீது கோபமில்லை என்பது போலவே தோனி பேசியிருந்தார். மேலும், தோனி தனது பிளேயிங் 11 அடிக்கடி மாற்றவும் மாட்டார் என்பதால் அதே அணியுடன் தான் சிஎஸ்கே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
முதல் போட்டியில் டெல்லியை வீழ்த்திய தேம்புடன் லக்னோ சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இரு அணிகள் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருண பகவான்
சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி மழை பெய்தால் போட்டி நிச்சயம் பாதிக்கப்படும். ஓராண்டிற்குப் பிறகு போட்டி நடக்கும் நிலையில், ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இருப்பினும், போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது வருண பகவான் கைகளிலேயே இருக்கிறது. இன்றைப் போட்டியில், இரு அணிகளின் ஆட்டத்திற்கு இணையாக வருண பகவான் ஆட்டத்தையும் ரசிகர்கள் கவனமாகவே எதிர்நோக்குகிறார்கள்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications