சீக்ரெட்டை கசியவிடுவோம்! எடப்பாடி ஆதரவாளர்கள் 17 பேருக்கு செக்! ஓபிஎஸ் டீமின் விபரீத லிஸ்ட்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 17 பேர் குறித்த ரகசியங்களை வெளியிடுவோம் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிரான சட்ட போராட்டங்களை ஓ பன்னீர்செல்வம் நடத்தி வந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இன்றும் கூட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி அணியில் இணைந்தனர்.

ஓபிஎஸ் ஆதரவு

ஓபிஎஸ் ஆதரவு


அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு குறைவு கொண்டே வருகிறது. வைத்தியலிங்கம், ஜேசிபி பிரபாகர், மனோஜ் பாண்டியன் போன்ற சில நிர்வாகிகள் மட்டுமே தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதிமுக விதிப்படி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு நடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு விதமான சில அழுத்தங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. பொதுக்குழு நடத்துவதில் பெரிய சிக்கல் இல்லை என்றாலும் வேறு சில விதமான சிக்கல்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எழுந்துள்ளது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் கோடநாடு வழக்கில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பாக மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த தமிழ்நாடு போலீஸ் கால அவகாசம் கேட்டுள்ளது.

கோடநாடு

கோடநாடு

இந்த வழக்கில் இன்று மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாட்டில் காணாமல் போன ஆவணங்கள் சென்னையில் வருமானவரித்துறை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்படி கோடநாடு வழக்கு விசாரணை உச்சத்தில் இருக்கும் நிலையில்தான் எடப்பாடி ஆதரவாளர்கள் குறித்த ரகசியத்தை வெளியிடுவோம் என்று ஓ பன்னீர்செல்வம் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இது தொடர்பாக பேட்டி அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், அதிமுகவில் முறைகேடு செய்தவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்த முறைகேடுகள் எங்களிடம் உள்ளது. இதை பேட்டியில் சொல்வதை விட கடிதமாக கொடுக்கிறேன், இவர்கள் செய்த டெண்டர் முறைகேடு, எத்தனை டெண்டரில் ஏமாற்றி உள்ளனர் என்று அனைத்தையும் சொல்கிறோம்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இவர்களுக்கு எங்கு சொத்துக்கள் இருக்கின்றன, அதை எப்படி சேர்த்தனர், யார் எல்லாம் பினாமி, 4 வருடத்தில் சொத்துக்களை சேர்த்தது எப்படி? வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்கள் என்னென்ன என்று அனைத்தையும் வெளியிட இருக்கிறோம். 17 பேரின் முறைகேட்டு விவரங்களை வெளியிடுவோம். இதற்கான லிஸ்ட் ரெடியாக இருக்கிறது. அதற்கான கடிதத்தை கொடுப்போம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.. காமராஜ் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு - அமைச்சர் ரகுபதி
     ஓபிஎஸ் விபரீத லிஸ்ட்

    ஓபிஎஸ் விபரீத லிஸ்ட்

    இது தொடர்பாக ஓபிஎஸ் வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில்.. எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்ட பார்க்கிறது. அவர் செய்வது தவறு. அப்படி நடக்கும் பட்சத்தில் நாங்கள் அவருக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட வேண்டி இருக்கும். எடப்படியுடன் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளின் ரகசியங்களை வெளியிட வேண்டி இருக்கும், என்று தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+