இந்தியாவில் ரூ. 10 நாணயம் செல்லுமா செல்லாதா? சில இடங்களில் ஏன் ஏற்பது இல்லை.. பின்னணி இதுதான்
சென்னை: இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் 10 ரூபாய் காயின் வாங்கப்படுவது இல்லை. இது தொடர்பாக மத்திய அரசு நிதி வட்டாரங்கள் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ சமீபத்தில் முடிவு செய்தது. வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு: பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது. அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது 2000 ரூபாயும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
1000 ரூபாய் நோட்டுகளை நீக்கிய போது ஏற்படும் திடீர் பண பற்றாக்குறையை போக்கவே 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக ஆர்பிஐ கூறியுள்ளது. தற்போது பண புழக்கத்தில் 10.8 சதவிகிதம் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதன் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 2000 ரூபாய் இல்லாமலே பணப்புழக்கம் முறையாக உள்ளது. அதனால் இப்போது இதை திரும்ப பெறுகிறோம் என்று ஆர்பிஐ அறிவித்து உள்ளது.
10 ரூபாய் நாணயம்: இந்த நிலையில்தான் இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் 10 ரூபாய் காயின் வாங்கப்படுவது இல்லை. இது தொடர்பாக மத்திய அரசு நிதி வட்டாரங்கள் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
பல இடங்களில் மக்கள் 10 ரூபாய் நாணயங்களை ஏற்பது இல்லை. கடைகளில் பலர் 10 ரூபாய் நாணயங்களை ஏற்பது கிடையாது. முக்கியமாக பழனி போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் 10 ரூபாய் நாணயங்களை ஏற்பது கிடையாது. இந்த நாணயம் செல்லாது என்று மக்கள் கருதுவதன் காரணமாக இப்படி பலரும் 10 ரூபாய் நாணயங்களை ஏற்பது இல்லை. இந்த நாணயம் செல்லாது என்று மக்கள் கும்பல் கும்பலாக நினைப்பதே இதற்கு காரணம் ஆகும்.
நாணயத்தை ஏற்க வேண்டும்: இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த தகவலில், பல்வேறு அளவுகள் வடிவமைப்புகளில் ₹ 10 நாணயம் இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் விநியோகிக்கப்படுகிறது. அவை எல்லாம் செல்ல கூடியது. அவை சட்டப்பூர்வ டெண்டர் மற்றும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தப்படலாம். நாட்டின் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் போலியானவை எனக் கருதி ஏற்றுக்கொள்ளப்படாத நிலை உள்ளது.

ஆனால் அது தவறு. இந்த நாணயத்தை ஏற்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து ₹10 நாணயத்தை மக்கள் வாங்குவது இல்லை என அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கவும், ரிசர்வ் வங்கி அவ்வப்போது செய்திக்குறிப்புகளை வெளியிடுகிறது, ஆனால் மக்கள் இதை கவனிப்பதில்லை.
பொதுமக்கள் தங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சட்டப்பூர்வமான டெண்டராக ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும், பொது மக்களிடையே நாணயங்களை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க, நாடு தழுவிய குறுஞ்செய்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் அச்சு ஊடக பிரச்சாரமும் ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட உள்ளது என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications