ரைட்.. விஆர் வாங்கியாச்சு.. "அது"வா இல்லை "இது"வா?.. அடுத்து என்ன செய்ய போகிறார் சகாயம்..!
சகாயம் தனி கட்சி தொடங்க வாய்ப்புள்ளதா என தெரியவில்லை
சென்னை: எதற்காக இப்படி அவசர அவசரமாக சகாயம் ஓய்வு பெற வேண்டும்? தேர்தல் நெருங்கும் சமயத்தில் என்ன செய்ய போவதாக உத்தேசம்? ஒருவேளை அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
Recommended Video

தேர்தல் காலம் வந்துவிட்டாலே, முதல்வர் வேட்பாளருக்கு தானாக அடிபடும் பெயர் சகாயம்.. அப்படித்தான் இப்போதும் சகாயம் பெயர் அடிபடுகிறது.. இதற்கு காரணம் சகாயம் திடீரென விஆர்எஸ் கேட்டு வாங்கிவிட்டார்.
அரசுப் பணியிலிருந்து தமிழக அரசும் அவரை விடுவித்துள்ளது.. இப்போது சகாயம் என்ன செய்ய போகிறார்? எதற்காக இப்படி அவசர அவசரமாக வேலையை விட்டு விட்டு வந்துள்ளார்? தேர்தல் நெருங்கும் சமயத்தில் சகாயத்தின் இந்த நடவடிக்கை ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

மதிப்பு
இந்த அளவுக்கு சகாயத்தை மக்கள் எதிர்பார்க்க காரணம், நேர்மைக்கு பெயர் போன அரசு அதிகாரி.. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.. தமிழகம் முழுவதும் சமூக சேவையாற்றி வருகிறார்... சொத்துக் கணக்கை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்புக்குரியவர்.

நேர்மை
சகாயம் மீது எப்பவுமே இளைஞர்களுக்கு தனி மரியாதை உண்டு... நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று விடாமல் அறைகூவல் விடுப்பவர்.. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை... இப்போது 3 வருஷம் இன்னும் வேலை இருக்கும் நிலையில் இப்போதே ஓய்வு பெற்றுவிட்டார்.

தேர்தல்
இந்த சூழலில் சகாயம் எப்படியும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அடித்து கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் அதேசமயம் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான சூழல் இப்போது இல்லை... எனவே அநேகமாக அவர் சுயேட்சையாக போட்டியிடக்கூடும் என்று சொல்கிறார்கள்..

தனிக்கட்சி
அல்லது தனது ஆதரவாளர்களை இந்த தேர்தலில் போட்டியிட வைக்கலாம். அல்லது கமலுடன்கூட கூட்டணி வைக்கலாம்.. இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.. கமல் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, ஊழலற்ற அத்தனை தகுதியும் திறமையும் உடையவர் சகாயம் மட்டுமே.. அந்த வகையில் இவர்கள் இணைந்தால் கூடுதல் மாஸ் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. ஆனால், சகாயம் என்ன முடிவெடுப்பார் என்று உறுதியாக தெரியவில்லை.

மாற்றம்
சகாயம் வெளிப்படையானவர். எதையும் துணிச்சலாக செய்யக் கூடியவர், மாற்றத்தை உண்மையிலேயே கொண்டு வர வேண்டும் என்று விரும்புபவர்.. எல்லாவற்றிலும் அப்பழுக்கற்றவர், ரொம்பவே வெளிப்படையானவர்.. அந்த வகையில் நிச்சயம் மாற்றத்தை தரக்கூடியவர் என்ற நம்பிக்கை வலுவாகி கொண்டே போகிறது.. அதேபோல ஊறி போன ஒரு அரசியலுக்கு மாற்றாக சகாயம் இருந்துவிட மாட்டாரா என்ற ஏக்க தொனியும் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications