வண்டியை திருப்பும் சசிகலா.. இந்த முறை "கன்பார்ம்டு".. விழிக்கும் மேலிடம்.. இடியாப்ப சிக்கலில் அதிமுக
எடப்பாடி பழனிசாமி சசிகலா தலைமையை ஏற்க முன்வருவாரா
சென்னை: தேர்தல் தோல்வியை அடுத்து, அதிமுகவுக்குள் 2 விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.. ஒன்று, ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி வருகிறது.. மற்றொன்று, சசிகலாவின் தேவை அதிகமாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த தினம் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது..
அப்போது ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா கலந்து கொண்டார்.. முக்கிய அறிவிப்பு ஏதாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

சசிகலா பேச்சு
ஆனால், வழக்கம்போல் உரையாற்றிவிட்டு போனார் சசிகலா. "நான் எனக்காக தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.. ஜெயலலிதாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமை.. 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இப்படி தொடர் தோல்வியை கண்டதில்லை.. ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு - இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு" இதை எண்ணிப் பார்த்து நாம் செயல்பட வேண்டும்.. விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை இதை அவர்கள் உணரவேண்டும்" என்றார்.

சசிகலா
மறுபடியும் அதிமுக மேலிடத்துக்கு சசிகலா விடுத்த அழைப்பாகவே இது பார்க்கப்பட்டாலும், தேர்தல் தோல்வி குறித்து சசிகலா கவனித்து வருவதும், கவலைப்பட்டு வருவதும் தெரியவந்தது.. இதற்கு பிறகுதான், ஆங்காங்கே மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவை தலைமையேற்க வருமாறு நேரடியாகவே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.. அதிமுகவுக்குள்ளேயே கூக்குரலும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

ஜெயக்குமார்
இதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமியும், மீண்டும் தன்னுடைய பலத்தை நிரூபிக்க ஆரம்பித்துவிட்டார்.. ஜெயக்குமாரை சிறையில் சந்திக்க போகும்போது, ஓபிஎஸ்ஸை கழட்டிவிட்டு போயுள்ளது எதற்காக என்று இதுவரை காரணம் தெரியவில்லை.. ஒருவேளை நாளை சசிகலா பக்கம் ஓபிஎஸ் எந்நேரமும் சாயக்கூடும் என்பதால், இப்போதே தனித்து இயங்க முடிவு செய்துவிட்டாரா என்று தெரியவில்லை.. அதற்கேற்றபடி, இன்று நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ்ஸும் கலந்து கொள்ளவே இல்லை.

விஸ்வரூபம்
எவ்வளவோ நம்பினேன்.. சொந்த சாதி கட்சியினரே கொங்குவில் நம்மை கைவிட்டுவிட்டார்களே என்று நெருங்கிய ஆதரவாளர்களிடம் எடப்பாடி புலம்பி வந்த நிலையில், அடுத்தக்கட்ட விஸ்வரூபத்துக்கு எடப்பாடி தயாராகிவிட்டார் என்கிறார்கள்.. அப்படியானால் சசிகலா மீண்டும் கட்சிக்குள் வர முடியாதா? அவருக்கு இப்போதும் எதிர்ப்புகள் வலுக்குமா என்ற சந்தேகங்களும் எழுகின்றன..

விரும்பவில்லை
இதுகுறித்து அதிமுக தரப்பினர் சொல்லும்போது, "சசிகலா வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பினாலும் மேல்மட்ட மூத்த தலைகள் யாரும் விரும்பவில்லை.. அப்படி இருந்தால் இந்நேரம் சசிகலாவை நேரடியாகவே சென்று சந்தித்திருப்பார்களே.. விரைவில் சந்திக்க வருகிறேன் என்று சசிகலா சொல்கிறாரே தவிர, ஜெயலலிதாவை போல நிதியுதவி செய்வதற்கு முன் வரவில்லை.. மேலும் அப்போது இருந்த அதே குடும்ப உறுப்பினர்கள்தான் சசிகலாவை இன்னமும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.. எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்டை இலையை எதிர்த்து, குக்கர் என்ற சின்னத்துடன் அமமுகவை தினகரன் வழி நடத்தி வரும்போது, அந்த கட்சியிலும் சேர வாய்ப்பில்லை.. சசிகலாவும் அதிமுகவுக்கு வர தேவையில்லை" என்கின்றனர்.

நெருக்கடி
இதனிடையே சசிகலா என்ன செய்ய போகிறார்? என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது.. முதலில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், நகர்ப்புற தேர்தலில் தங்கள் பலத்தை காட்ட வேண்டிய நெருக்கடி எடப்பாடி தரப்புக்கு ஏற்பட்டது. .. அந்த முடிவுகள் மறுபடியும் சறுக்கலில் விடவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சசிகலா கட்சிக்குள் நுழைவாரா? அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற அடுத்த கேள்விகளும் எழுந்துள்ளன..

ஓபிஎஸ்
முதல்கட்டமாக சுற்றுப் பயணத்தை தொடங்கினால் தன் பக்கம் ஆதரவாளர்களை திரட்டலாம் என்ற முடிவில் இருக்கிறார் சசிகலா.. ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய தலைகளை சந்தித்து பேசினாலே, ஓபிஎஸ், எடப்பாடி, வேறு வழியில்லாமல் இறங்கி வந்தே ஆக வேண்டும் என்பதே சசிகலாவின் கணக்காக உள்ளது.. ஆனால், இதற்கு ஓபிஎஸ் இணங்கி வருவாரே தவிர, எடப்பாடி சசிகலாவிடம் இறங்கி வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.. ஆக, ஒற்றை தலைமை பிரச்சனை இன்னும் சில நாட்களுக்கு நீள வாய்ப்புள்ளது என்பதே தற்போதைய அதிமுக நிலைமை.

தேனி கர்ணன்
இதற்கிடையில், சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணன் ஒரு யூடிபூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. அவர் பேசும்போது, "தமிழகம் முழுக்க வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூட நாங்கள் கேட்டவில்லை, குறைந்த பட்சம் தேனி மாவட்டத்திலாவது ஓபிஎஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டாமா? எடப்பாடியிலாவது எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பெற்றிருக்க இருக்க வேண்டுமா? அப்படி செய்திருந்தால் இவர்கள் இருவரும் தலைவர்கள் என்று சொல்லலாம்.

சின்னம்மா
இவர்களது சொந்த தெருவில் கூட இவர்களுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது... திமுகவை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள். உடனடியாக இவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு, சின்னம்மாவை வந்து சந்தித்து பேச வேண்டும்.. இல்லையென்றால் விரைவில் அதிமுகவுக்குள் புரட்சி வெடிக்கும், போராட்டங்கள் ஆரம்பிக்கும், அதிமுக அலுவலகம் கைப்பற்றப்படும், இது விரைவில் நடக்கப் போகிறது" என்று எச்சரித்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications