அரசியலில் சாதிக்க சசிகலாவுக்கு இருக்கும் ஒரே அஸ்திரம் "இது"தான்!.. கையிலெடுப்பாரா?
சென்னை: அதிமுக தொடர்புகளை பயன்படுத்தி மக்களின் சக்தியாக முயற்சிக்க உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பை சசிகலா பயன்படுத்திக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதாவுடன் இருந்த வரையில் அவருக்கு ஆலோசனைகளை வழங்குவது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் ஆலோசனைகளை வழங்கியவர் சசிகலா என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவுடன் இருந்த நட்பை வைத்து சசிகலாவும் அரசியலில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளராக்கப்பட்டார், முதல்வராக பதவியேற்க இருந்தார்.... இதெல்லாம் ஜெயலலிதா மறைந்தவுடன்!

தொண்டர்கள்
இதன் பின்னர் நடந்ததெல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும். இதையடுத்து தொண்டர்களுடன் பேசுகிறேன் என்ற பேரில் அதிமுகவில் தற்போது அன்றாடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் எப்படியாவது அதிமுகவில் இணைய முயற்சிக்கிறார். இவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக
சசிகலா எத்தனை பேருடன் பேசினாலும் அவரை அதிமுகவில் இணைக்கவே முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்த நிலையில் சசிகலா அரசியலில் சோபிக்க வேண்டுமானால் அதிமுகவை கைப்பற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

எண்ணிக்கை
அதற்கு மாறாக அதிமுகவின் தொடர்புகளை பயன்படுத்தி தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தினகரனின் அமமுகவை வலுப்படுத்த வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் மட்டும் சசிகலா அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், அதிமுக மொத்தம் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

உள்ளாட்சி தேர்தல்
இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை. சசிகலா அரசியலில் மக்கள் சக்தியாக மாற வேண்டும் என்றால் அவருக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு உள்ளாட்சி தேர்தல் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது. ஏனெனில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றால் மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
Recommended Video

பொறுமை
ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சீமான், கமல்ஹாசன், தினகரன் ஆகியோருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. ஆனால் அந்த பட்டியலில் சசிகலா இல்லை. எனவே முதலில் மக்கள் செல்வாக்கை பெற வேண்டும். அதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சசிகலா உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதுதான் ஒரே வழி. அதைவிடுத்து அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களிடம் பேசி ஆடியோ ரிலீஸ் செய்தாலும் ஒரு பயனும் இல்லை. எனவே சசிகலா என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications