Schools Reopen: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விடுமுறை நீட்டிக்கப்படுமா? வெளியான புது தகவல்
சென்னை: பள்ளி மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பது தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டப்படி ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படுமா என்பது கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறை அளிக்கப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோடை விடுமுறை
கோடை காலத்தில் வெப்பம் நிலவுவதைப் பொறுத்து கோடை விடுமுறையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென்மேற்குப் பருவ மழை மற்றும் கோடை மழை காரணமாக தமிழகத்தில் தற்போது வெயில் தாக்கம் தணிந்துள்ளது.
இதையடுத்து பள்ளிகள் குறித்த நேரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திட்டமிட்டப்படி ஜூன் 2 ஆம் திறக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிளயாகி உள்ளது.
ஜூன் 2ல் திறப்பு?
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று உறுதியாகி உள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2025-26ஆம் புதிய கல்வி ஆண்டில் 2.6.2025 (திங்கள் கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புத்தகங்கள் அனுப்பும் பணி
அதேபோல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 4 லட்சம் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாள் முதலே மாணவர்களுக்கு பாடப் புத்தங்கங்கள் விநியோகிக்க ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை துரிதப்படுத்தி வருகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்று அண்மையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் வானிலை குறித்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் சொல்வதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications