ரஞ்சித் போட்ட போடு.. கூலாக பார்த்த வீரமணி.. ஈவிகேஎஸ் மீது டெல்லி பறந்த புகார்.. திமுக மூவ் என்ன?
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான பிடி இறுகி கொண்டே வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை என்ன? என்று தேசிய கமிஷன் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது... அத்துடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸின் மூத்த தலைவர் இளங்கோவன் மீது, மாநில அரசு எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சரமாரி விமர்சித்திருந்தார்..
ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள்,

சித்தாந்தம்
இசை மன்னன் யார் என்பது எல்லோருக்குமே தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. 80 வயசாகுது வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்..

பக்திமான்
ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்... பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்? அம்பேத்கர் அதுபோல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்?

சங்கராச்சாரியார்
உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு... முசோலினியோடு மோடியை ஒப்பிடு.. இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்? பெரியார் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம்" என்று பேசியிருந்தார்.

ரஞ்சித் ட்வீட்
ஈவிகேஎஸ் இப்படி சாதியை குறிப்பிட்டு பேசியதால், கண்டனங்களும் குவிந்தன.. இவர் மீது பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுந்தது.. இதைத்தான் டைரக்டர் ரஞ்சித்தும் ட்வீட் போட்டு அன்றே கண்டித்திருந்தார். ஈவிகேஎஸ் பேச்சு "பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது" என்று பா.ரஞ்சித் காட்டமாக கூறியிருந்தார்.

ஏர்போர்ட் மூர்த்தி
இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே, சென்னை அடையாறை சேர்ந்த ஏர்போர்ட் மூர்த்தி என்பவரும், சென்னையைச் சேர்ந்தவர் இளமுருகு முத்து என்பவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஈவிகேஎஸ் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் தந்திருந்தனர்.. இதில், ஏர்போர்ட் மூர்த்தி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தவிர, டெல்லியில் உள்ள, தேசிய எஸ்சி - எஸ்டி கமிஷனிலும் புகார் அளித்தார். இதையடுத்து, தேசிய எஸ்சி - எஸ்டி கமிஷனும், "இளங்கோவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர வேண்டும்" என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியது...

இறுகும் பிடி
தற்போது மீண்டும் சென்னை கமிஷனருக்கும், கலெக்டருக்கும் நோட்டீசை கமிஷன் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில், புகார்தாரர், குற்றம் செய்த நபர், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரம், கைது நடவடிக்கை இருந்தால் அதன் விபரம், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை வழங்கிய விபரம் ஆகியவை குறித்து, இந்த நோட்டீஸ் கண்ட, 15 நாட்களுக்குள் விளக்கம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, ஈவிகேஎஸ் மீதான பிடி இறுகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் அரசு
திமுக அரசு ஈவிகேஎஸ் பேச்சு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மற்றொருபுறம் எழுந்துள்ளது.. காரணம், கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளதால், மட்டுமல்ல, அன்றைய தினம், ஈவிகேஎஸ் பேசும்போது, "தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி.. இந்த ரவிக்கு வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரவியை ஒழிக்க நினைத்தால் அதை கொஞ்சம் சீக்கிரமா செய்ய முடியும்.. ஆனால் மாநிலத்தை மிகசிறப்பாக ஆண்டு கொண்டிருக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
Recommended Video

கி.வீரமணி
எனினும் தற்போது 2 இடத்தில் ஈவிகேஎஸ் மீது புகார் தரப்பட்டுள்ளது.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தரப்பட்ட புகார் மீது நடவடிக்கை இதுவரை எடுக்காத பட்சத்தில்தான், தேசிய கமிஷன் தற்போது கேள்வியை எழுப்பி உள்ளது.. இதனால், டெல்லிக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தமிழக போலீஸ் ஆளாகி உள்ளது.. உரிய பதில் இது தொடர்பாக அளிக்கப்பட்டாலும், இளங்கோவனுக்கு சிக்கல் கூடி உள்ளது தெரியவந்துள்ளது.. அத்துடன் கி.வீரமணி இதுவரை இது தொடர்பாக எந்த பதிலும், விளக்கமும் தரவில்லை.. இளங்கோவன் எந்த அளவுக்கு இந்த விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளாரோ, அதே அளவு அதிருப்தி மூத்த தலைவர் வீரமணி மீதும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளதை மறுக்க முடியாது..!












Click it and Unblock the Notifications