பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் கேன்சல் செய்தால் உடனே பணம் திரும்ப கிடைக்கும்! ரயில்வே மாஸ் பிளான்
சென்னை: ஐஆர்சிடிசி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில நேரங்களில் பணம் செலுத்திய பிறகு டிக்கெட் புக்கிங் ஆகாமல் போகும். அதேபோல டிக்கெட் கேன்சல் செய்யும் போதும் பணம் திரும்ப கிடைக்க 3 நாள்கள் வரை ஆகும். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க ரயில்வே புதிய பிளானை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து சேவையை தீர்த்து வைப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. உலகிலேயே நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடான இந்தியாவில் தினம் தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயணித்து வருகிறார்கள்.

அப்படி, ஆன்லைனின் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் போது சில நேரங்களில், வாடிக்கையாளர்களின் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். ஆனால், டிக்கெட் புக்கிங் ஆவது இல்லை. அதேபோல், முன்பதிவு செய்யும் வெயிட்டிங்கில் டிக்கெட் இருந்து கடைசி வரை டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் இருந்தாலும் டிக்கெட்டுக்கான தொகை தானாகவே ரீஃபண்ட் ஆகிவிடும்.
1 மணி நேரத்தில் திரும்ப கிடைக்கும்: சில நேரங்களில் பயண திட்டம் ரத்து ஆனால், பயணிகளும் தங்கள் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற நேரங்களில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் மீண்டும் அக்கவுண்டில் வந்து சேர சில நாட்கள் ஆகும். அதிபட்சமாக 3 நாட்கள் வரை இதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தொழில் நுட்ப வசதி எவ்வளவோ பெருகிவிட்ட இந்த காலத்திலும் டிக்கெட் ரிஃபண்ட் கட்டணம் திரும்பி வருவதற்கு இவ்வளவு தாமதம் ஆகிறது என பயணிகள் பலரும் ஆதங்கப்படுவதை காண முடிகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களிலும் அவ்வப்போது ரயில்வே நிர்வாகத்தை நெட்டிசன்கள் சாடுவதை பார்க்க முடியும். இந்த நிலையில், பயணிகளின் சிரமத்தை போக்கும் விதமாக டிக்கெட் கேன்சல் ஆனால், அடுத்த 1 மணி நேரத்தில் டெபிட் செய்யப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும் விதமாக வசதியை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
விரைவில் அமலுக்கு வருகிறது: இதற்கான பணிகளை ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயின் டெக்னிக்கல் பிரிவான CRIS இணைந்து மேற்கொள்கிறது. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் விரைவில் இந்த வசதி அமலுக்கு வர உள்ளது. இந்த வசதி அமலுகு வந்தால் பயணிகள் பணம் பிடிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் ஆகிவிட்டாலும் அடுத்த சில மணி நேரங்களில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளமுடியும்.
ரயில் பயணம்: தொலை தூர பயணங்களுக்கு செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என்று செக் செய்துவிட்டுத்தான் பேருந்து, கார்களில் செல்வதை பற்றி பயணிக்ள் யோசிப்பார்கள். தற்போது ரயிலில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் மூலாமவே புக் செய்து கொள்ளலாம். 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இதனால், பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வது என்றால் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்து வருகிறார்கள். அதேபோல், பயணத்திற்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications