சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் ஜெயிச்சாச்சு.. ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் நேரம் வந்துவிட்டது!.. அச்சத்தில் சிலர்!

Google Oneindia Tamil News

சென்னை: கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு இது குறித்த நடவடிக்கைகள் தொடங்குமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக இருப்பது தேர்தல் அறிக்கைகள்தான். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க ஒவ்வொரு கட்சியிலும் தனிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

பிரச்சாரம், பொதுக் கூட்டம், ஆளும் கட்சியின் நிறை, குறை உள்ளிட்டவைகள் தாண்டி மக்களிடம் முக்கிய இடம் பிடிப்பது தேர்தல் அறிக்கைகள்தான். இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிமுக கோட்டையில் திமுக கொடி... ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..!அதிமுக கோட்டையில் திமுக கொடி... ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..!

அதிமுக

அதிமுக

அதிமுக ஆட்சியில் சில அமைச்சர்கள் ஊழல் புரிந்துள்ளதாகவும் அதுகுறித்த விவரங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை கோரியும் திமுக தேர்தலுக்கு முன்னர் மனு கொடுத்தது. ஆனால் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையே எடுக்கப்படவில்லை.

அறிக்கை

அறிக்கை

இதையடுத்து திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஊழல் குறித்து தெரிவித்துள்ளது. கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அது போல் ஜெயலிலதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளது.

145 இடங்கள்

145 இடங்கள்

இந்த நிலையில் திமுக தேர்தலில் போட்டியிட்டு அக்கட்சி மட்டும் 145 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வரும் 7ஆம்தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொள்கிறார். அவ்வாறு பதவியேற்றுக் கொண்ட சில காலத்திற்குள்ளாக ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்.

சிறையில்

சிறையில்

அவ்வாறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும் போது ஊழல் புகார்கள் குறித்து திமுக சொன்னபடி விசாரணை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு ஊழல் எதிர்பார்ப்பாளர்களிடம் அதிகம் உள்ளது. தனது தேர்தல் பிரச்சாரங்களில் ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Will Stalin implement his election manifesto about corruption on ADMK ministers?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X